பேஸ்புக் வரலாற்றில் மிகப்பெரும் தடங்கல் | தினகரன்

பேஸ்புக் வரலாற்றில் மிகப்பெரும் தடங்கல்

பேஸ்புக் சமூகதளம் தனது வரலாற்றில் மிக மோசமான செயலிழப்பு ஒன்றை சந்தித்ததால் உலகெங்கும் உள்ள பயனர்களுக்கு அந்த சமூகதளத்தை பயன்படுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

கடைசியாக பேஸ்புக் தனது பயனர் எண்ணிக்கை 150 மில்லியனாக இருந்தபோது 2008ஆம் ஆண்டு இந்த அளவில் தடங்கலை சந்தித்தது. தற்போது அதன் மாதாந்த பயனர் எண்ணிக்கை 2.3 பில்லியனாகும்.

பேஸ்புக்கின் பிரதான தளத்துடன் அதன் இரு செய்திப் பகிர்வு செயலிகள் மற்றும் புகைப்பட பகிர்வுத் தளமான இன்ஸ்டகிராம் அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டன. இந்த தடங்கலுக்கான காரணம் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.

நேற்றுக் காலை பேஸ்புக்கின் செலிகள் வழமைப்பு திரும்பியதோடு, மீண்டும் செயற்படும் அறிவிப்பை இன்ஸ்டகிராம் வெளியிட்டது. இதன்போது பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழைய முடியாமல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகினர். பின்னர் சிறிது நேரம் கழித்து, ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பேஸ்புக் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். உங்களது காத்திருப்பிற்கு நன்றி’ எனும் குறுஞ்சய்தி அனைவருக்கும் கிடைத்துள்ளது.


Add new comment

Or log in with...