யெமன் யுத்தத்தில் அமெரிக்க ஆதரவை கைவிட வாக்களிப்பு | தினகரன்

யெமன் யுத்தத்தில் அமெரிக்க ஆதரவை கைவிட வாக்களிப்பு

யெமன் யுத்தத்தில் ஈடுபடும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கான அமெரிக்காவின் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவரும் பிரேரணை ஒன்றுக்கு குடியரசு கட்சியின் ஆதிக்கத்தில் உள்ள செனட் சபையின் ஆதரவு கிடைத்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு இடையில் உடன்பாடு ஒன்றின் கீழ் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் சவூதி கூட்டணிக்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவர 54 ஆதரவு வாக்குகள் கிடைத்ததோடு எதிராக 46 வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் ஜனநாயக கட்சியின் ஆதிக்கத்தில் இருக்கும் பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நீரைவேற்றப்படும் வாய்ப்பு இருக்கும் சூழலில் அதற்கு எதிராக வீட்டோவை பயன்படுத்துவதாக டிரம்ப் உறுதி அளித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஆரம்பமான யெமன் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு மில்லியன் கணக்கானவர்கள் பஞ்சத்தில் வாடுகின்றனர்.

இங்கு தாக்குதல் நடத்துவதற்கு சவூதிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா, அந்த கூட்டணியின் வான் தாக்குதல்களுக்கு உளவு மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி வருகிறது.


Add new comment

Or log in with...