விளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல் | தினகரன்


விளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல்

சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீனின் பணிப்புரைக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவியின் 2018ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் சம்மாந்துறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பணிமனையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆசிக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் யூ.எல்.எம். சமீம் உள்ளிட்ட விளையா ட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 2018ஆம் ஆண்டு சம்மாந்துறை பிரதேசத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவான வீரர்களான எம்.ஏ.எம்.இம்சான், எம்.எச்.எம்.வபீம் லுத்பி ஆகியோர்கள் பாராளுமன்ற உறுப்பினரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

சவளக்கடை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...