அகில இலங்கை மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் சிறுவர் மெய்வல்லுனர் போட்டியில் சாதனை | தினகரன்


அகில இலங்கை மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் சிறுவர் மெய்வல்லுனர் போட்டியில் சாதனை

அகில இலங்கை மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையிலான ஹிட்ஸ் அத்லட்டிக் போட்டியில் சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ் பாடசாலை மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை கண்டி போகம்பர மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ் பாடசாலை அகில இலங்கை மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்று ஊருக்கும், கல்முனை வலயத்திற்கும், மாவட்ட, மாகாணத்திற்கும் பெறுமை சேர்த்த மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசியர்களான திருமதி ஜே. எம். இப்றாகீம், எம். பீ. எம். சிராஜ்டீன் அவர்களுக்கும், அதிபர், மற்றும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்கள் சார்பாக பாடசாலை அபிவிருத்தி சபை நன்றிகளை தெரிவிக்கின்றது.

இப்பாடசாலையானது கிழக்கு மாகாணப் போட்டியில் முதலாமிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

யூ. கே. காலித்தீன் 

 


Add new comment

Or log in with...