சென். அலோசியஸ் Glory of Galle ஆரம்பப் போட்டியில் இலகு வெற்றி | தினகரன்


சென். அலோசியஸ் Glory of Galle ஆரம்பப் போட்டியில் இலகு வெற்றி

காலி சென். அலோசியஸ் கல்லூரிக்கும் வித்தியாலோக கல்லூரிக்குமிடையே காலியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளால் சென். அலோசியஸ் வெற்றிபெற்றது.

காலி பொது மைதானத்தில் (09) நிறைவு பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வித்தியாலோக கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடினார்கள். வித்தியாலோக கல்லூரி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். அலோசியஸ் கல்லூரி 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது போட்டியில் ஆட்ட நாயகனாகவும் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் அர்ச்சன உடுகம்பொல தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த பந்து வீச்சாளராக சதுன் மதுசங்கவும், சிறந்த பந்து காப்பாளராக மனுஸ்க சமீத்தும் விருதுகளைப் பெற்றார்கள்.

இப்போட்டிக்கு டிஎஸ்ஐ நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளது. இப்போட்டியைக் காண பெருமளவு ரசிகர்கள் திரண்டிருந்தார்கள் மேலும் இப்போட்டிப் பற்றிய நேர்முக வர்ணனை இலங்கை வானொலியின் ருகுணு சேவையில் ஒலிபரப்பப்பட்டது.


Add new comment

Or log in with...