ஜெர்மன் சர்வதேச சுற்றுலா கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு | தினகரன்


ஜெர்மன் சர்வதேச சுற்றுலா கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு

ஜெர்மனியின் பேர்லின் நகரில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா கண்காட்சியான ஐரிபி-2019ல் இலங்கை பங்கேற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்துகொண்டார். 

ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சபையின் தலைவர் கிஷூ கோமிஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  

இக்கண்காட்சியில் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு சபையினால் தயாரிக்கப்பட்ட இலங்கை குறித்த ஆவணப் படமொன்றும் காட்சிப்படுத்தப்பட்டது. டிஜிட்டல் முறையிலான ஆவண திரைப்படம் பிரித்தானியா, ஜேர்மனி,பிரான்ஸ், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.  

சர்வதேசக் கண்காட்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் அமைச்சர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 10ஆண்டு காலப்பகுதியினுள் இலங்கைக்கு வருகை தருபவர்கள் மற்றும் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நிலையான வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்தவிடயம் வெளிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மிகமுக்கியமாக இலங்கைசிறந்தசுற்றுலாத் தலம் என்பது நன்கு மெய்யுறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு சபையின் தலைவர் கிஷூ கோமஸ் கருத்துத் தெரிவிக்கையில்,உலகின் வேறு எங்கும் இல்லாத தனித்தன்மையை இலங்கைகொண்டுள்ளது. இலங்கைவரும் பயணிகள் என்னவெல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள் என்பதனை குறிகோளாக கொண்டுசெயல்படுகிறோம் என்றார்.   


Add new comment

Or log in with...