அரசு மூன்றரை வருடங்களில் 20,715 வீடுகள் நிர்மாணிப்பு | தினகரன்

அரசு மூன்றரை வருடங்களில் 20,715 வீடுகள் நிர்மாணிப்பு

பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 1இலட்சம் வீதம் 3147 பயனாளிகளுக்கு நிதி

கடந்த மூன்றரை வருடங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் கணிசமான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டபோதும் அவை தொடர்பில் பாரிய விளப்பரப்படுத்தல்களை மேற்கொள்ளவில்லையென முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். 

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சராகத் தான் பதவிவகித்த மூன்றரை வருட காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தலா 8இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான 20ஆயிரத்து 715வீடுகளை அமைத்துக் கொடுத்திருப்பதாகவும், இது குறித்த உண்மைகளைக் கூறாது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வீடுகளையும் அரசாங்கம் அமைத்துக் கொடுக்காதது போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் அடுக்கிவருவதாகவும் அவர் கூறினார். 

பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் இதனைத் தெரிவித்தார்.  

மீள்குடியேற்ற வரலாற்றில் குறுகிய காலப்பகுதியில் அதி கூடிய பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டது எமது காலப்பகுதியிலேயே ஆகும். 2016ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் 4008வீடுகளும் 2017ஆம் ஆண்டில் 1639வீடுகளுமாக மொத்தம் 5647வீடுகளும்,கிளிநொச்சி மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டில் 1095வீடுகளும் 2017ஆம் ஆண்டில் 826 வீடுகளுமாக மொத்தம் 1921 வீடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டில் 415 வீடுகளும் 2016ஆம் ஆண்டில் 1035 வீடுகளும் 2017ஆம் ஆண்டில் 608 வீடுகளுமாக மொத்தம் 2058 வீடுகளும் மன்னார் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டில் 1332 வீடுகளும் 2017ஆம் ஆண்டில் 776 வீடுகளுமாக மொத்தம் 2108 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 910 வீடுகளும் 2017ஆம் ஆண்டு 704 வீடுகளுமாக மொத்தம் 1614 வீடுகளும் திருகோணமலை மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு1320 வீடுகளும் 2017ஆம் ஆண்டு 692 வீடுகளுமாக மொத்தம் 2012வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 1035வீடுகளும் 2017ஆம் ஆண்டு 691 வீடுகளுமாக மொத்தம் 1726 வீடுகளும்,அம்பாறை மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 165 வீடுகளும் 2017ஆம் ஆண்டு 108 வீடுகளுமாக மொத்தம் 273வீ டுகளும் புத்தளம் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 48 வீடுகளும் பொலன்னறுவை மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 240 வீடுகளும் 2017ஆம் ஆண்டு 4 5வீடுகளுமாக மொத்தம் 285 வீடுகளும்,அநுராதபுரம் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 65வீடுகளும் 2017ஆம் ஆண்டு 85 வீடுகளுமாக மொத்தம் 150 வீடுகளும் 1990ஆம் ஆண்டிற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களுக்காக 2016- 2017ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட 2873 வீடுகளுமாகவே மொத்தமாக 20715கல் வீடுகள் கடந்த மூன்றரை வருடங்களில் என்னால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.  

அத்துடன் பகுதி சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்காக தலா 100,000 ரூபா வீதம் 3147பயனாளிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குடிநீர் வசதியை மேம்படுத்தல், இலவச மின்சார இணைப்பை வழங்குதல், உள்ளக வீதிகள் புனரமைப்பு, சிறு குளங்கள் புனரமைப்பு, நுண்கடன் சுமையுள்ளவர்களுக்கான உதவி, சிறு கைத்தொழில் ஊக்குவிப்பு திட்டம், காணிகளை விடுவிப்பதற்காக செயல்திட்டம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேதமடைந்த சொத்தழிவுகளுக்கான நட்டஈடு வழங்கும் திட்டம், சுயதொழில் உதவிகள், விசேட திட்டங்கள் எனப் பலவழிகளிலும் மக்களுக்கான உதவிகளை மேற்கொண்டுள்ளேன் என்றார். 

(ஷம்ஸ் பாஹிம். மகேஸ்வரன் பிரசாத்)


Add new comment

Or log in with...