Friday, March 15, 2019 - 3:51pm
ஹட்டன் தனியார் பஸ் நிலையப் பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை நேற்று (14) பொலிஸார் மீட்டுள்ளனர்
ஹட்டன் டிக்கோயா நகர சபையினர், குறித்த பஸ் நிலையப் பகுதியிலுள்ள பொது மலசலகூடத்திற்கு அருகில் குழியொன்றைத் தோண்டிக்கொண்டிருந்தபோது, குறித்த கைத்துப்பாக்கி தென்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகர சபை ஊழியர்கள் தமக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று துப்பாக்கியை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைதுப்பாக்கியானது பழமை வாய்ந்ததாகவும் துருப்பிடித்தும் காணப்படுவதுடன், துப்பாக்கியிலுள்ள இலக்கங்கள் அழிந்து காணப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
(நோட்டன்பிரிஜ் நிருபர் எம்.கிருஸ்ணன்)
Add new comment