தங்கநகைகளுடன் இரு இலங்கையர்கள் இந்தியாவில் கைது | தினகரன்


தங்கநகைகளுடன் இரு இலங்கையர்கள் இந்தியாவில் கைது

தங்கநகைகளைக் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பெண்கள் இருவர் இந்தியாவில் இன்று (15) சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் பூனே சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பெண்கள் இருவரே தங்கநகைகளுடன் கைதுசெய்யப்பட்டனர்.  அத்துடன், இவர்களிடமிருந்து சுமார் 30.31இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகளையும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தங்கச்சங்கிலி, வளையல்கள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Add new comment

Or log in with...