புதையல் தோண்டிய ஐந்து பேர் கைது | தினகரன்


புதையல் தோண்டிய ஐந்து பேர் கைது

 
மின்னேரியா மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் புதையல் தோண்டிய ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  
 
பொலிஸ் சுற்றிவளைப்பின்போது அங்கிருந்து தப்பிச் சென்ற இருவரை தேடி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.  மின்னேரியாவில் தனியாருக்குச் சொந்தமான காணியிலுள்ள வீடொன்றின் பின்புறம் மூவர் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தபோது இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாக பொலிஸார் கூறினர்.  
 
இவர்கள் தம்பேபொல, எப்பாவெல மற்றும் வாரியபொல பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள போதும் ஏனைய இருவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  
 
இதேவேளை பொலன்னறுவை மன்னம்பிட்டி காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 19,21 மற்றும் 26 வயதுகளைச் சேர்ந்தவர்கள். சந்தேக நபர்களை கந்துருவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Add new comment

Or log in with...