மு.வண்டி - வேன் விபத்து; இரு பெண்கள் உ ள்ளிட்ட மூவர் பலி | தினகரன்


மு.வண்டி - வேன் விபத்து; இரு பெண்கள் உ ள்ளிட்ட மூவர் பலி

மு.வண்டி - வேன் விபத்து; இரு பெண்கள் உ ள்ளிட்ட மூவர் பலி-Polgahawela Accident-3 Killed-Kilinochchi Accident-66 Yr Old Dead

சிறுவர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் படுகாயம்

பொல்கஹவெல, மெத்தலந்த வளைவில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

குருணாகலிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றும் அதற்கு எதிர்த் திசையில் வந்த கடற்படைக்குச் சொந்தமான வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பெண்கள் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவர்கள் மூவர் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் காயமடைந்து, குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலங்கள் பொல்கஹவெல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பொல்கஹவெல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி விபத்தில் 66 வயதான நபர் பலி

இதேவேளை, கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று (14) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மோதியதில், வீதியில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மு.வண்டி - வேன் விபத்து; இரு பெண்கள் உ ள்ளிட்ட மூவர் பலி-Polgahawela Accident-3 Killed-Kilinochchi Accident-66 Yr Old Dead

குறித்த சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிசார், லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி அக்கராயன் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய சந்தியாபிள்ளை பீற்றர் இமானுவேல் என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மு.வண்டி - வேன் விபத்து; இரு பெண்கள் உ ள்ளிட்ட மூவர் பலி-Polgahawela Accident-3 Killed-Kilinochchi Accident-66 Yr Old Dead

குறித்த விபத்து இரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கிளிநாச்சி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஜி.எல்.ஏ.ஜே. குணவர்தன தெரிவிக்கின்றார்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எஸ்.என். நிபோஜன்)


Add new comment

Or log in with...