87 ஆவது அகவையில் தினகரன் | தினகரன்


87 ஆவது அகவையில் தினகரன்

தமிழ் பேசும் மக்களின் குரலான உங்கள் அபிமானப் பத்திரிகை தினகரன் 87 வருடங்களைப் பூர்த்திசெய்து 88 வது ஆண்டில் இன்று காலடி பதிக்கின்றது. 87 வருட கால வரலாற்றில் பல்வேறு சவால்களை முறியடித்து இன்றும் தினகரன் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதற்குக்காரணம், எமது அபிமான வாசகர்களாகிய நீங்கள் தொடர்ந்தும் அளித்து வரும் ஆதரவும் நல்லாசியும்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஊடகத்துறை தொழில்நுட்பத்தில் நவீனங்களை முழுமையாக உள்வாங்கியபடி தினகரன் தற்போது சர்வதேச பத்திரிகைத் தொழில்நுட்பங்களுக்கு நிகராக வெளிவந்து கொண்டிருக்கிறது. எப்போதுமே, தலைமுறை மாற்றங்களுக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்வதற்குத் தினகரன் தவறியதில்லை. வாசகர்களாகிய உங்களது ஆதரவும் ஆசீர்வாதமுமே தினகரனின் வளர்ச்சிக்கு மேலும் வலுவூட்டுமென்பதில் ஐயமில்லை.


Add new comment

Or log in with...