இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் விருப்புமனு | தினகரன்

இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் விருப்புமனு

தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை அளிக்க நாளை கடைசிநாள். விருப்ப மனுவுடன் ரூ.10 ஆயிரத்துக்கு டி.டி. எடுத்து கட்சி தலைமை அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

போட்டியிட விருப்பமுள்ளவர்கள் சென்னை, பொள்ளாச்சி தலைமையகங்களில் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் அறிமுக விழா, கோவை கொடிசியா வளாகத்தில் 24ந்திகதி மாலை 6 மணி அளவில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடக்கிறது குறிப்பிடத்தக்கது.

(சாஹுல் ஹமீட்)


Add new comment

Or log in with...