சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்: கருதினாலுக்கு 6 ஆண்டு சிறை | தினகரன்

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்: கருதினாலுக்கு 6 ஆண்டு சிறை

கத்தோலிக்க திருச்சபையின் மூத்த அதிகாரியான ஜோர்ஜ் பெல் சிறார்களுக்கு எதிராகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990களின் பிற்பகுதியில் 13 வயது சிறுவர்கள் இருவரிடம் பாலியல் ரீதியாகத் தவறான முறையில் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பப்பரசர் பிரான்ஸிசின் முன்னாள் நிதி அமைச்சரான கருதினால் பெல், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறையில் இருந்த பின்னரே பிணை பெற அனுமதிக்கப்படுவார் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள 77 வயதான கருதினால் பெல், தீர்ப்பை எதிர்த்து ஜூன் மாதத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

40 வயதைக் கடந்து விட்ட 2 ஆண்கள், 1970ஆம் ஆண்டுகளில் நீச்சல் குளம் ஒன்றில் வைத்து, கருதினால் ஜோர்ஜ் பெல், தங்களிடம் தவறாக நடந்ததாகவும் முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் புகார் கூறினர்.

இதே போன்று 1980ஆம் ஆண்டுகளில் 3 சிறுவர்கள் முன்பாக ஜோர்ஜ் பெல், தன் முழு உடலையும் நிர்வாணமாக காட்டியவாறு நின்றார் எனவும் புகார் கூறப்பட்டது.


Add new comment

Or log in with...