வியட்நாம் பெண்ணையும் விடுவிக்குமாறு கோரிக்கை | தினகரன்


வியட்நாம் பெண்ணையும் விடுவிக்குமாறு கோரிக்கை

வட கொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரரைக் கொலைசெய்ததாய் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரில் ஒருவரான வியட்நாமியப் பெண்ணை விடுவிக்குமாறு மலேசியாவை வியட்நாம் கேட்டுக்கொண்டுள்ளது. மற்றொருவரான இந்தோனேசியப் பெண்ணை மலேசிய அதிகாரிகள் விடுதலை செய்த மறுநாள் வியட்நாமின் கோரிக்கை வந்துள்ளது.

டோன் தி ஹுவோங்கை விடுவிக்குமாறு வியட்நாமின் வெளியுறவு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இரண்டு பெண்களும் நரம்புகளைப் பாதிக்கும் இரசாயனத்தை கிம் ஜோங் நாம் முகத்தில் தடவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தோனேசியப் பெண் சித்தி ஆய்ஷா விடுதலை செய்யப்பட்டது குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. அவரை விடுவிக்கும்படி இந்தோனேசிய அரசாங்கம் மலேசியாவைக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சட்டத்தின் அடிப்படையில்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று மலேசியாவின் பிரதமர் மகாதீர் மொஹமட் கூறினார்.


Add new comment

Or log in with...