Thursday, March 28, 2024
Home » நாசாவின் 2024 கலண்டரில் இலங்கை சிறுவனின் ஓவியம்

நாசாவின் 2024 கலண்டரில் இலங்கை சிறுவனின் ஓவியம்

by Gayan Abeykoon
December 28, 2023 3:00 am 0 comment

நாசாவின் 2024ஆம் ஆண்டு நாட்காட்டியின் ஜூலை மாதத்துக்கான நாட்காட்டியில் இலங்கை சிறுவன் ஒருவனின் ஓவியம் இடம்பிடித்துள்ளது.

அநுராதபுரம், திறப்பனை பிரதேசத்தை சேர்ந்த, திறப்பனை மஹாநாம ஆரம்பப் பாடசாலையில் தரம் 2இல் கல்வி கற்கும் தஹாம் லோசித பிரேமரத்ன எனும் சிறுவனின் ஓவியமே இடம்பிடித்துள்ளது.

ஓவியம் வரைவதில் உள்ளார்ந்த திறமை கொண்ட தஹாம் லோசித பிரேமரத்ன, பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தனது படைப்புகளை சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில், நாசா ஏற்பாடு செய்த கலைப்போட்டி பற்றிய தகவல் தஹாமுக்கு கிடைத்ததை தொடர்ந்து, ‘விண்வெளியில் வாழ்வதும், வேலை செய்வதும்’ எனும் கருப்பொருளில் தஹாம் ஓவியம் வரைந்தார்.

இந்த ஓவியம் உலகின் பல நாடுகளினதும் சிறிய ஓவியங்களை தோற்கடித்து முதலிடத்தை பெற்றது. இந்நிலையில், இச்சிறுவன் பலரது பாராட்டையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT