கடும் வரட்சியால் சிவனொளிபாதமலை நீர் ஊற்றுக்கள் வற்றியுள்ளன | தினகரன்

கடும் வரட்சியால் சிவனொளிபாதமலை நீர் ஊற்றுக்கள் வற்றியுள்ளன

மத்திய மலை நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் தொடர் வரட்சியின் காரணமாக சிவனொளிபாத மலையில் காணப்படும் நீர் ஊற்றுக்கள் வற்றிபோய் காணப்படுகிறது. இதனால் யாத்திரிகர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.  

மேலும் அங்கு ஊற்றெடுக்கும் 'சியத்தலகங்குல' நதியில் பெறப்படும் நீரை தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை சுத்திகரித்து நாளாந்தம் வழங்குகின்றது. இருப்பினும் இரவு 7.00மணி தொடக்கம் அதிகாலை 5.00  மணிவரையிலான காலப் பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதால் நீரை சேகரித்து வைத்து கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதால் பொது மலசல கூடங்களுக்கு செல்வோர் சிரமத்துக்குள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க ஜப்பான் நாட்டினால் உருவாக்கப்பட்ட 'சாமசைத்திய' வனபகுதிக்கு பெறப்பட்ட நீரையே கடந்த இரண்டு தசாப்த காலமாக பாவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் தற்போது கடும் வரட்சி நிலவுவதால் அவ் ஊற்றிலிருந்து சிறியளவு நீரினையே பெறக்கூடியதாக உள்ளதால் அவ்விடத்திற்கு வாராந்தம் வரும் யாத்திரிகர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு தூயநீரை வழங்க முடியாதுள்ளதாக மதகுருமார்கள் தெரிவிக்கின்றனர்.   

(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...