பல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் மஹீல் தெஹிதெனிய கைது | தினகரன்

பல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் மஹீல் தெஹிதெனிய கைது

பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் கைது-IUSF Prtest-Convener Maheel Bandara Dehideniya Arrested

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மஹீல் பண்டார தெஹிதெனிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்பார்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியின்போது, இயல்பு நிலையை குழப்பும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் கைது-IUSF Prtest-Convener Maheel Bandara Dehideniya Arrested

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள தீவிரவாத தடுப்பு சட்டத்தை உடனடியாக நீக்குமாறு தெரிவித்து, இன்று (13) பகல் கொழும்பு பொது நூலகத்திற்கு அருகிலுள்ள கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட குறித்து ஆர்ப்பாட்ட பேரணி, பாராளுமன்ற சுற்றுவட்டத்தை நோக்கி சென்றது.

பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் கைது-IUSF Prtest-Convener Maheel Bandara Dehideniya Arrested

இதன் காரணமாக கொழும்பிலிருந்து பத்தரமுல்லை வரை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

பேரணியாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அடைந்த மாணவர்கள் அங்கு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் குறித்த பேரணி பாராளுமன்ற வீதிக்குள் நுழைந்ததை அடுத்து, அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்காக பொலிசாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் கைது-IUSF Prtest-Convener Maheel Bandara Dehideniya Arrested

Add new comment

Or log in with...