மின்தூக்கிகளுக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க முடிவு | தினகரன்

மின்தூக்கிகளுக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க முடிவு

மின்தூக்கி (ELEVATORS) மற்றும் மின்சார நகரும் படிக்கட்டுக்கள் இயந்திரம் (ESCALATORS) ஆகியவற்றுக்கு இலத்திரனியல் பாதுகாப்புக்கான பரிந்துரை சான்றிதழை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

இலங்கையில் கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்தூக்கி இயந்திரம் ELEVATORs மற்றும் மின்சார இயந்திர நகரும் படிக்கட்டுக்கள் (ELEVATORS) ஆகியவற்றில் அவ்வப்போது அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. மின்சாரம் தடைப்படுவதினாலும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்த்துக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடனான உடன்பாட்டில் இயந்திரம் தொடர்பில் தரச் சான்றிதழை விநியோகிக்க பொருத்தமான நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டுமென பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து மின்தூக்கி இயந்திரம் மற்றும் மின்சார இயந்திர நகரும் படிக்கட்டு இயந்திரங்களுக்கு இலத்திரனியல் பாதுகாப்பு தொடர்பில் சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் நடைமுறைக்கு மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமரப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  


Add new comment

Or log in with...