Saturday, April 20, 2024
Home » சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசக விழா

சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசக விழா

by Gayan Abeykoon
December 28, 2023 5:27 am 0 comment

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் வருடாந்த திருவாசக விழா சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்றுமுன்தினம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவங்களும், திருவாசக ஏடுகளும் ஆலயத்திலிருந்து தேவார பாராயணத்துடன் ஆச்சிரமத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

இதில் அறிமுகவுரையை சொல்லின்செல்வர் ஆசிரியர் இரா.செல்வவடிவேல் நிகழ்த்தினார். கலைநிகழ்வுகளாக சிறுப்பிட்டி நாகதம்பிரான் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடனம் இடம்பெற்றது.

சிறப்பு சொற்பொழிவை உளவள துணையாளர் நா.நவராஐ் நிகழ்த்தினார்.

திருவாசக பண்ணிசையை இசைநாவரசு எம்.எஸ். பிரதீபன் வழங்கினார். இதில் அணிசேர் கலைஞர்களாக ஹார்மோனியம் – இசைசுரபி என். செல்வச்சந்திரனும், புல்லாங்குழல் இசையை நாதவினோதன், கே.தேசிகன், மிருதங்கம்,நாதமணி -எம்.லோகேந்திரன், கெஞ்சிரா- வித்வான் என்.கேதாரநாத் ஆகியோரின் பக்கவாத்தியங்களுடன் இடம்பெற்றது.

இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி மாவட்டத்தின் பூஜாரி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கரியாலை நாகபடுவான் கிழக்கு, கரியாலை நாகபடுவான் மத்தி, குமுழமுனை ஆகிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு ரூபா 50,0000/- பெறுமதியான உணவுப் பொருட்கள் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனவ சுவாமிகளால் வழங்கப்பட்டன.

கரவெட்டி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT