இரண்டு வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு தலைகாட்டும் ராய் | தினகரன்


இரண்டு வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு தலைகாட்டும் ராய்

நடிகர் ஜெய்யுடன் ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்த 'நீயா 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகை ராய் லட்சுமி இப்படம் குறித்து பேசும்போது... "இரண்டு வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கிறேன். சுரேஷ் கதை கூறினார். 3 மணி நேரம் கதை கேட்ட பிறகு இது பெரிய படமாக இருப்பது போல் உள்ளது. அதை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொறுமையாக ஆலோசித்து முடிவெடுத்தேன். பாம்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். பேய் படங்களுக்கு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் இப்படத்தின் காதல், திரில்லர் அதனுடன் பாம்பு கதையும் இருப்பதால் இதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி" என்றார்.


Add new comment

Or log in with...