'கெவுமா' தங்கியிருந்த வீட்டில் 150 கிலோ ஹெரோயின் மீட்பு | தினகரன்

'கெவுமா' தங்கியிருந்த வீட்டில் 150 கிலோ ஹெரோயின் மீட்பு

'கெவுமா' தங்கியிருந்த வீட்டில் 150 கிலோ ஹெரோயின் மீட்பு-More than 150kg Heroin Found at Moratuwa Rawathawatta

சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர் தெரிவித்தார்.

இன்று (11) மொரட்டுவை, ராவத்தாவத்தையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பேதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாதாள குழு தலைவர் மாகந்துரே மதூஷின் உதவியளர்களில் ஒருவரான, தொடந்துவ வடுகே கெலும் இந்திய சம்பத் என்பவர் குறித்த வீட்டில் தங்கியிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

'கெவுமா' என அழைக்கப்படும் குறித்த நபர், கடந்த மார்ச் 04 ஆம் திகதி, பேலியகொடை பிரிவு, குற்ற விசாரணை பிரிவினால் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் தங்கியிருந்த குறித்த வீட்டில், T56 ரக துப்பாக்கியிற்கு பயன்படுத்தப்படும் சுமார் 3,000 தோட்டாக்கள் மற்றும் இரு கைத்துப்பாக்கிகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, கைதான சந்தேகநபர் மார்ச் 10 ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவருக்கு மார்ச் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...