ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்தவெளி சிலுவைப் பாதை | தினகரன்

ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்தவெளி சிலுவைப் பாதை

கொழும்பு ஜோசப் வாஸ் மன்றம் ஏற்பாடு செய்திருந்த திறந்தவெளி பெரிய சிலுவைப் பாதை கடந்த ஞாயிறன்று சிறப்பாக நடந்தேறியதுபல்லாயிரக் கணக்கில் விசுவாசிகள் பங்கெற்ற இந்த திருப்பவனி கொழும்பு புதுச்செட்டித்தெரு வியாகுலமாதா ஆலய முன்றலிலிருந்து ஆரம்பித்து கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் நிறைவுபெற்றது.

சிலுவைப் பாதையின் 14நிலைகள் தியான வடிவில் நடத்தப்பட்டு புனித லூசியாஸ் ஆலய முன்றலில் இறுதியாக திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டு நிறைவுபெற்றது. திருப்பலிப்பூசையை கொழும்பு உயர் மறை மாவட்ட தமிழ் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியான அருட்தந்தை மனோகுமாரன் நிறைவேற்றனார். அருட்தந்தையர்கள் பலரும் இணைந்த கூட்டுத் திருப்பலியாக இத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இம்முறையும் வழமையான பாதையில் சிலுவைப்பாதை பவனி பயணித்ததுடன் 14இடங்களில் 14நிலைகள் ஏற்படுத்தப்பட்டு தியானங்கள் முன்னெடுக்க்பபட்டன. அருடதந்தையர்களான நியூட்டன் தேவராஜ், ரஜனிகாந்த் ஆகியோர் சிறந்த சிந்தனைகளுடன் வழிபாடுகளை முன்னெடத்தனர்.வ்வொரு நிலையிலும வித்தியாசமான படிப்பினைகளை வழங்கிய அருட்தந்தையர்களுடன், பாடல்கள் மற்றும் தியானங்களை அருட்தந்தை ஆனந்தன் பெர்னாண்டோ சிறப்பாக முன்னெடுத்து உதவினார்.

இந்த வழி நடத்தலின் போது பெண்கள் தொடர்புபடும் படிப்பினைகள் சிலுவைப் பாதையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும் போது அவரைச் சுற்றியிருந்த பெண்கள் துக்கம் தாளாது அழுகின்றனர். அப்போது அவர் எனக்காக அழவேண்டாம் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என அவர்களைப் பார்த்து கூறுகின்றார்.

இன்றைய சூழ்நிலையில் எமது குடும்பங்களில் பெற்றோர்கள் பலர் தமது பிள்ளைகளுக்காக அழுது கொண்டிருக்கும் நிலையைக் காணமுடிகின்றது. உண்மையான வாழ்க்கையை மறந்து தீமையை நோக்கிய பாதையில் பிள்ளைகள் பலர் பயணிக்கின்றார்கள். துன்பங்கள் துயரங்களில் மனக்காயங்களோடு வேதனையில் அழுகின்ற பலரை நாம் பார்க்கின்றேம். வாழ்க்கை என்பது எமக்கு ஒரு முறை கிடைக்கின்ற வரப்பிரசாதம் அதனை நன்மைத் தனமாக வாழ்ந்து முடிக்க நம்மால் முடியாமல் போவதேன்?

பழிச்சொல் சூடப்பட்டு நிரபராதியான இயேசு தண்டனை அனுபவிக்கின்றார். எல்லோராலும் ஒதுக்கப்பட்ட ஒரு பெண் சிலுவையைச் சுமந்து செல்லும் இயேசுவுக்கு எதிர்ப்படுகின்றார். அக்காலத்தில் பெண்களுக்கு எதிரான பல சட்டங்கள் நடைமுறையிலிருந்தன. அந்த நிலையிலும் வெரோணிக்கா என்கின்ற பெண் இயேசுவின் முகத்தைத் துடைக்கின்றார்.

எத்தகைய எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் இயேசுவுக்காக அதனை ஏற்க துணிந்து முன்வந்த பெண் வெரோனிக்கா. அதனால் அந்த வீரப் பெண் படை வீரர்கள் சூழ்ந்து நிற்கின்ற நிலையிலும் துணிவுடன் சென்று இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கின்றாள். மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையின் வெளிப்பாடு இது.                                 (ஸ)


Add new comment

Or log in with...