Thursday, March 28, 2024
Home » அறநெறிப் பாடசாலைகளுக்கான இறுதிச் சான்றிதழ் பரீட்சை இன்று

அறநெறிப் பாடசாலைகளுக்கான இறுதிச் சான்றிதழ் பரீட்சை இன்று

இரு தினங்களுக்கு 669 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்

by Gayan Abeykoon
December 28, 2023 7:20 am 0 comment

நாடளாவிய ரீதியில் இயங்கும் அறநெறிப் பாடசாலை இறுதிச் சான்றிதழுக்கான பரீட்சை இன்று 28ஆம் திகதி ஆரம்பமாகிறது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அது தொடர்பில் நேற்று விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதுடன் ஏற்கனவே தீர்மானித்தபடி இன்று 28ஆம் திகதி மற்றும் நாளை 29ஆம் திகதி என இரு நாட்கள் இந்த பரீட்சை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளின் இறுதிச் சான்றிதழ் பரீட்சை நாடளாவியரீதியிலுள்ள 669 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் சம்பந்தப்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் இதுவரை கிடைத்திராத விண்ணப்பதாரிகள் அறநெறி பாடசாலையின் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி திணைக்களத்தின் இணையதளத்தளத்திற்குள் பிரவேசித்து தமக்கான அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT