களைகட்டிய ஆர்யா - சாயிஷா திருமணம்! | தினகரன்


களைகட்டிய ஆர்யா - சாயிஷா திருமணம்!

ஆர்யா - சாயிஷா திருமணம் இன்று (10) ஹைதராபாதில் நடக்கிறது. நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் 'கஜினிகாந்த்' திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த பெப்ரவரி 14 - காதலர் தினத்தன்று இவர்கள் தங்கள் திருமணம் குறித்து ட்விட்டரில் அறிவித்தனர்.

நேற்று முன்தினத்திலிருந்தே திருமண விருந்துகள் களைகட்டத் தொடங்கின. சாயிஷா, பிரபல பாலிவுட் நடிகர்  நடிகர் திலிப்குமாரின் உறவினர் ஆவார். இதனால் கடந்த 8ஆம் தேதி மாலை ஹைதராபாத்தில் நடந்த விருந்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர். நேற்று நடந்த சங்கீத் நிகழ்வில் அல்லு அர்ஜுன் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஆர்யா - சாயிஷா காதல் ஏற்பட காரணமாக அமைந்த 'கஜினிகாந்த்' திரைப்படத்தைத் தயாரித்தது 'ஸ்டுடியோ க்ரீன்' ஞானவேல்ராஜா. தற்போது இவர், ஆர்யா நடிக்கும் இன்னொரு படத்தையும் தயாரிக்கிறார். நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டிலை ஆர்யாவின் திருமணத்தை முன்னிட்டு மார்ச் 9 மாலை 6 மணிக்கு வெளியிட்டார் ஞானவேல்ராஜா. 'டெடி' என்ற தலைப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டரை, 'வன்டர்ஃபுல் கிஃப்ட்... சகோதரர்கள் ஞானவேல்ராஜா, சக்தி சௌந்தரராஜன் இருவருக்கும் நன்றி' என்று கூறி ட்விட்டரில் பகிர்ந்தார் ஆர்யா.  

           


Add new comment

Or log in with...