சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125வது ஆண்டு நிகழ்வு | தினகரன்

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125வது ஆண்டு நிகழ்வு

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125வது ஆண்டு நிகழ்வுகள் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11ஆம் திகதி கல்லடியிலுள்ள சிவானந்தா தேசியப் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

11ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4.30மணிமுதல் 6.30மணிவரை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பிரதம பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் வரவேற்புரை நிகழ்த்துவார். 

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தரின் ஆசியுரையும் நடிகர் விவேக்கின் சிறப்புச் சொற்பொழிவும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

(கல்லடி குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...