கலைந்து போனது பல்கலைக்கழகக் கனவு | தினகரன்

கலைந்து போனது பல்கலைக்கழகக் கனவு

மலையக மக்களின் பண்பாட்டியலை வெளிப்படுத்த ஏதுவாக பல்கலைக்கழகமொன்றை வென்றெடுக்க முடியாமல் போனமை பெரும் குறை

ஒரு சமூகம் எழுச்சி பெற வேண்டுமாயின் கல்விக்கான முழுவளங்களும் காணப்பட வேண்டியது முக்கியமாகும். இன்று மலையக சமூகம் கல்வித் துறையில் விழிப்புப் பெற்று வரும் சூழல் உருவாகி வருகின்றது. ஆங்காங்கே அதற்கான அறிகுறிகள் தென்படவே செய்கின்றன.

பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மலையக மாணவர் தொகையில் வருடா வருடம் அதிகரிப்புத் தோன்றுவது நல்ல சகுனம்.  ஆனால் இது போதுமான வேகமோ வளர்ச்சியோ அல்ல. ஏனெனில் இங்கு தேவை அதிகமாக இருக்கின்றது. விளைச்சலோ குறைந்துள்ளது.

தேசிய ரீதியில் மலையக கல்வி அபிவிருத்திக்கான கரு வேற்றம் அவ்வப்போது மலையக அரசியல்வாதி களால் உண்டாக்கப்படுவது உண்டு.

குறிப்பாக தேர்தல் காலங்களில் பெரும்பான்மையின தலைவர்க ளின் முன்னால் இவர்களின் பேச்சு அதிர்வலைகளை உண்டாக்கவே செய்யும். முன்பு தேசிய பாடசாலைகள் என்று பேசியவர்கள் பின்னர் மௌனமாகிப் போனார்கள். பின்னர் அவர்களே மலையகத்துக்கென ஒர பல்கலைக்கழகம் என சூளு ரைக்கவும் செய்தார்கள். இதில் எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்பது இவர்களுக்கு தெரியாத சங்கதி அல்ல. ஆனால் கோரி னார்கள்.

தமது முன்னைய வாக்குறுதி களைச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றிக் கூறினார்கள். இப்பொழுதெல்லாம் தேசிய பாடசாலை, மலையக பல்க லைக்கழகம் என்று வீறு கொண்டு பேசியவர்கள் கூற்று தோற்றுப் போய் தொழில் நுட்பக் கல்லூரி என்ற மட்டத்துக்கு வந்து நிற்கின்றது. இதன் மூலம் தேசியப் பாடசாலைகள் காற்றோடு கரைந்து போய் மலையக பல்கலைக்கழக கனவு கானல்நீராகி இனி தொழில் நுட்பக் கல்லூரி என்னும் பொறி இந்த அரசியல்வாதிகளின் கரங்க ளில் வசமாக சிக்கிக் கொண்டிருக்கின்றது. 

2019ஆம் ஆண்டு உதயமாகி விட்ட இந்நிலையில் மலையகக் கல்வி நிலை குறித்து கவனம் செலுத்தப்படுவது நல்லது. ஒரு வகையில் இது மீளாய்வாகக் கூட இருக்கலாம். முன்பு கல்வி இராஜாங்க அமைச்சராகவே இரா தாகிருஷ்ணன் இருந்தார். அவர் மலையக கல்வி அபிவிருத்தி  சம்பந்தமான எண்ணக்கருக்களைக் கொண்டிருந்தார். எனினும் ஆக்க பூர்வமாக அவரால் எதனையும் செய்ய முடியாமற் போனமையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவரின் சேவை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் விரிவ டைந்திருந்தது. இதனால் அங்கு இவருக்கு அமர்க்கள வரவேற்பு இருந்தது. தற்போது கல்வி இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் வந்திருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தில் மலையக கல்வி அபிவிருத்திக்கு சாதகமான பாதகமான சங்கதிகளை பக்குவப்படுத்திப் பார்ப்பது தவிர்க்கவியலாததே ஆகும்.

ஏற்கனவே பல்கலைக்கழக கல்லூரி அமைக்க காணி ஒதுக்கீடு நடந்துள்ளது என்றார்கள். இந்த இடத்தில்தான் தொழில்நுட்பக் கல்வி அமையப் போகிறதா? அல்லது இதுவும் முன்னைய முன்மொழிவுகளைப் போல பின்வாங்கிக் கொள்ளப்படும் பிர சாரமா  என்ற ஐயம் மலையக புத்திஜீவிகளுக்கு வரவே செய்கிறது. ஹட்டனில் திறந்த பல்கலைக் கழகம் அமைப்பதற்கு  காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் இருந்தன. எனினும் பல்கலைக்கழகம் அமையப் போவது இல்லை என்று ஆனதும்  பல்வேறு ஐயங்கள் கடந்த காலங்களில் எழவே செய்தன. அவைகளுக்கு இன்னும் உரிய விளக்கங்கள் எத்தரப்பிடமிருந்தும் வந்தபாடில்லை.  இதேநேரம் இலங்கையில் பல்க லைக்கழகங்கள் பிரதேச ரீதியில் பரிமாணம் அடைந்து வருகின்றன. ஊவா மாகாணம். சப்ரகமுவ, வடக்கு,கிழக்கு மாகாணங்கள், தென்கிழக்கு என்று  எல்லாப் பகுதி களிலும்  பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் மலையகத்தில் மட்டும் அது மறுதலிக்கப்பட்ட ஒன்றாக கொள்ள ப்படுகின்றது. கலை, கலாசார பண்பாட்டு அம்சங்களின் பிரதிபலிப்பாக பல்கலைக்கழக கோரல் அமைய வேண்டும் என்பதே கல்வியியலாளர்களின் பார்வையாக இருக்கின்றது.                                                     

  யாழ் பல்கலைக்கழகம்  தமிழ் மக்களின் பண்பாட்டியலை வெளி ப்படுத்துவது போல, தென்கிழக்கு பல்கலைக்கழகம் முஸ்லிம் மக்களின் பண்பாட்டியலை வெளி ப்படுத்துவது போல மலையக கலை கலாசார விழுமியங்களை வெளிக்கொணரும் வாய்ப்புக்கள் இல்லாதிருப்பது கவலைக்குரியது. இப்போது தொழிட்நுட்பக் கல்லூரி பற்றிப் பேசப்படுகிறது. இதன் மூலம் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினைப் பெற வழிபிறக்கும்.                                                                  

இது நல்லது தான். ஆனால் மலையக கல்லூரிக்கு மாற்றீடாகவே இந்த ஏற்பாடு என்பது ஏற்றுக் கொள்ள முடியாததே. உண்மையில் பல்கலைக்கழகமும் தொழில்நுட்பக் கல்லூரியும் கிடைக்கப் பெறுமாயின் அது பாரிய வரப்பிரசாதமாகவே இருக்கும்.  வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் இப்படித்தான் அமையப் பெறுகின்றன. திறந்த பல்கலைக்கழகம் தொடர்பா கவும் பல்கலைக்கழக கல்லூரி தொட ர்பாகவும் பன்முக கருத்தேற்றங்கள் காணப்படவே செய்கின்றன. 

ஆனால் இவை சம்பந்தமான தீர்க்கமான கொள்கையோ விவாத ரீதியிலான அணுகுமுறையோ அரசியல்வாதிகளிடம் இல்லா திருப்பது பெறும் பின்னடைவு. இது இவர்களது இயலாமையை மூடி மறைப்பதையே உணர்த்துகின்றது. உண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு தேசிய பாடசாலையைக்  கேட்டு பெற முடியாத பலவீன நிலையிலேயே மலையக அரசியல்வாதிகள் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.                                                                    

இன்று சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் கற்கும் மாணவர்கள்   நுவரெலியா மாவட்ட பாடசாலைகளையே நம்பியாக வேண்டிய நிலை. இரத்தினபுரியில் உயர் கல்வி பெறுவதற்கான சகல வளங்களையும் கொண்ட பாட சாலையொன்றை நிர்மாணித்துத் தருவதாக அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிதானும் நிறைவேற்ற ப்படவில்லை. இவர்கள்தான் ஹட்ட னில் 50ஏக்கர் காணியைப் பெற்று பல்கலைக்கழகம் அமைப்போம் என மார்தட்டியும் கொண்டார்கள்.                                                              

உயர் கல்விக்கான அபிவிருத்தி நிதி என ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திலும் கூறப்படு கின்றது. ஆனால் மலையக பல்கலைக்கழகமென எப்போதும் பேசப்படுவது கிடையாது. கொத்மலை பகுதியிலேயே 5ஏக்கர் காணியில் பல்கலைக்கழகம் அமையும் என கூறிவர்களும் பின்வாங்கிப் போயிருக்கிறார்கள்.                                                                     

உண்மையில் மலையக அரசி யல்வாதிகள் பல்கலைக்கழகம் சம்பந்த மான கோரிக்கையை முன்வைக்கவே செய்தார்கள். ஆனால் அவர்களின் அணுகுமுறைகளில் காணப்பட்ட பலவீனம் அல்லது முதிர்ச்சியற்ற தன்மை அதை சாத்தியப்படாமல் ஆக்கியுள்ளது. குறிப்பாக மலையக சமூகத்துக்கு உயர்கல்விக்கான தேவையின் அவசியம் பற்றி எடுத்துச் சொல்வதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. பல்கலைக்கழகம் இல்லாவிட்டாலும் பல்கலைக் கழக கல்லூரியாவது உருவாக்கம் பெற்றுக் கொள்வதில் சரியான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை என்பதே மலையக கல்வியி யலாளர்களது பதிவாகக் காண ்படுகின்றது.                    

 இதற்கு உதாரணமாக மருத்துவக் கல்லூ ரியாக இருந்த உயர் கல்வி நிறுவனமே பின்னர் கொழும்பு பல்கலைக்கழகமாக பரிணாமம் பெற்றதை முன்வைக்கின்றார்கள்.   எனவே ஒரு பல்கலைக்கழக கல்லூரிக்கான வலுவான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடிய திராணியற்ற தலைமைகள்  காலத்துக்குக் காலம் தமது வாக்குறுதிகளை மாற்றி மாற்றி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வெளிப்பாட்டின் இறுதிக் குறியீடாகவே  தொழில் நுட்பக்கல்லூரி என்னும் கோஷம் முன்வைத்தாகி விட்டது. ஆனால் எதுவுமே ஆரம்பமாகவில்லை.

அரசாங்கம் வருடாவருடம் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கும் மலையக உயர் கல்வி அபிவிருத்திக்கான நிதி என்ற ஒதுக்கீட்டின் பின்னணியில் பெரிதாக எதுவுமே ஆகிவிடப் போவதில்லை.

எனவே மலையக சமூகத்தின் அவசர தேவைக்கான அட்சய பாத்திரம் அலட்சியப்படுத்தப்படுவதையே நடப்புகள் சுட்டுகின்றன. யாரை யார் வழி நடத்தி உயர் கல்வி தேவைக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவாரோ தெரியாது. ஏனைய சமூகங்களைப் பொறுத்தவரை மலையக சமூகம் பல்வேறு அம்சங்களிலும் பின்னடை வைக் கண்டுள்ளமையை மறுக்க முடியாது.

 வீட்டுரிமை, வாழ்விட அரசியல் உரிமை, சுகாதார மேம்பாடு, அரச தனியார் (தோட்ட) தொழில் வாய்ப்புகள், சுயதொழில் முயற்சிகள், கல்வி அபிவிருத்தி, விளையாட்டுத் துறை என எதை எடுத்துக் கொண்டாலும் ஏற்றத்தையோ காண முடியவில்லை.

கல்வி நிலை மேம்பாடு என்பது ஏனைய அனைத்து பின்னடைவுகளுக்கும் அடிப்படை என்பர் அறிவியலாளர்கள்.

உலகவியலில் ஏற்பட்டு வரும் அதிதீவிர மாற்றங்களுக்கேற்ப மலையக சமூகமும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய அவசரமும் இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கான வேலைத் திட்டம் தேவை. இதன் முதற்படியாக கல்வி அபிவிருத்திக்கான ஓர் இணைப்பகம் நிறுவப்படுவதும் நல்லது என்பர் கல்வி சார்ந்தோர். இன்னும் மலையகத்தில் கல்வி மேம்பாடு கருதியதான பொதுத் தகவல் வளநிலையம் இல்லை என்பது அவர்களின் மனச்சுமை.

பல்கலைக் கழகத்தில் கற்போர் தொகை கூட குத்து மதிப்பாக சொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையே இன்னும் நீடிக்கின்றது. கல்வி சார்ந்த முறையான தரவுகள் கூட இல்லை. மொத்த ஆசிரியர் விபரங்கள், ஆசிரியர் பற்றாக்குறை சம்பந்தமான திரட்டுகள், வருடாந்தம் இடைவிலகும் மாணவர் தொகை, பாடசாலை செல்லாத சிறுவர்கள், வேலையற்றோர், வெளிநாட்டில்  வேலை செய்யும் கற்றோர், பாடசாலை வளர்ச்சி சம்பந்தமான பதிவுகள், உயர் கல்வி பெற்றவர்களின் தகவல்கள் எதனையுமே பெற முடியாத ஓர் அசமந்த நிலையே இங்கு நிலவுவதாக அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.பல்வேறு சூழ்நிலைகளிலும் இலவசக் கல்வியைப் பலவீனமாக்கும் அம்சங்கள் காணப்படுகின்றன.

இலவசக் கல்வி, இலவச பாடநூல்கள், இலசவ சீருடை ,போஷாக்குணவு (ஆரம்பப் பிரிவு மானவர்களுக்கு) என்பவற்றுடன் பாடசாலை வள நிலையை மேம்படுத்த நிதி என அரசு துறை ரீதியிலான வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் அதனை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி பல்வேறு இடைத்தடைகள் ஆக்கிரமிப்புச் செய்கின்றன. குறிப்பாக கணித விஞ்ஞான தொழில்நுட்ப ஆகிரியர்களுக்கான தட்டுப்பாடு.

இத்துறைகளுக்கான பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையால் எதிர்காலத் தேவைகளுக்கான கல்வி எட்டாக்கனியாகும் துர்ப்பாக்கிய நிலை. கலைப்பட்டதாரிகள் குறித்தே பாரிய கவனயீர்ப்பு நிலவுவது பெரும் பின்னடைவுக்கான அச்சுறுத்தல். தகவல்களின்படி 250மில்லியன் ரூபா செலவில் 23விஞ்ஞான கணித பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் அபிவிருத்திக்கான உதவி சுமார் 30பாடசாலைகளுக்குக் கிடைக்கின்றது. அருகிலுள்ள பாசாலை சிறந்த பாடசாலை பற்றிய அறிவூட்டல் அவசியமானதே.

 இன்று மலையகப் பாடசாலைகளில் கட்சி அரசியலை முன்னிறுத்தும் செயற்பாடுகள் தாராளமாகவே இடம்பெறுகின்றன. இதனால் கல்வி நிர்வாகச் சீர்கோடுகள் தலைதூக்குகின்றன. சில பாடசாலைகளின் கற்பித்தல் தரம் குறித்தும் சில அதிபர் ஆசிரியர்களின் துஷ்பிரயோகங்கள் பற்றியும் அடிக்கடி ஊடகங்களில் செய்திகள் வரவே செய்கின்றன. ஒரே பாடசாலையில் வருடக்கணக்காக ஒட்டிக் கொண்டிருப்போர் பலர் அரசியல் அதிகாரம் கொண்டோரின் ஆசிர்வராதத்தால் குப்பை கொட்டும் நிலைமை நீடிக்கின்றது. இப்படி  அட்டை போல் ஒட்டிக் கொண்டிருப்பதன் அவசியம் என்னவென்ற கேள்வியும் எழுகின்றது.

 உண்மையில் மலையகத்தில் கல்வி அடைவு மட்டங்கள் மந்த கதியிலேயே எட்டப்படுகின்றன. இதற்கு கல்விசார் சமூகத்தின் கரிசனையின்மையும் அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாறான புறக்கணிப்புமே காரணமென்பது அவதானப் பதிவு. இது தொடர்பான புரிதலோ கல்வி அபிவிருத்தி சம்பந்தமான பற்றுதலோ இல்லாத அரசியல்வாதிகளும் கற்ற சமூகமும் இருப்பது என்னவோ உண்மை.

இதற்கிடையேதான் நீதிபதி, சட்டத்தரணி, வைத்தியர், பொறியியலாளர், கணனி துறைசார் சமூகத்தின் உள்வாங்கல்களும் இடம்பெற்று வருகின்றன. மாகாணரீதியில் சகல வளங்களையும் அடிப்படையாகக் கொண்ட தேசிய பாடசாலைகள் அமைக்கப்படுவது அவசியம் என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகின்றது. கணிசமானோர் வருடந்தோறும் பல்கலைக்கழகம் செல்கின்றனர். இதில் அதிகமானோர் கலைப்பிரிவைச் சார்ந்திருப்பவர்கள் .குறிப்பாக இரத்தினபுரி, ஊவா  மாணவர்கள் உயர் கல்விக்காக நுவரெலியா மாவட்டத்தை நாட வேண்டியுள்ளது.

 இன்று கொழும்பு, நுவரெலியா, மட்டக்களப்பு, மாத்தளை என்று மாணவர்கள் படையெடுப்பதால் கல்வி அபிவிருத்திக்கான சூழ்நிலை மந்தமாகின்றது. இதற்குக் காரணம் வாழும் பிரதேசத்திலேயே வளமான பாடசாலை இன்மையே. இங்கு வளம் என்ற  பதம் கணித, விஞ்ஞான ,தொழில்நுட்ப பாடநெறிகளைக்  கொண்ட கற்கை நிலையங்களைக் குறிக்கின்றது.

எனவே கட்சி அரசியலுக்குக் கல்வி நிலையங்களை பலிக்கடாவாக்காது சுதந்திரமாக இயங்கக் கூடிய சூழ்நிலையை அரசியல்வாதிகள் ஏற்படுத்த வேண்டும்.அத்தோடு மலையக மாணவர் செறிந்து வாழும் மாவட்டங்களில் தேசியப் பாடசாலைகள், பல்கலைக்கழகம் அல்லது அதற்கீடான கற்கை நிலையங்களை அமைத்து மலையகக் கல்வி அபிவிருத்திக்கு கைகொடுக்க ேவண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இதற்கான காய்நகர்த்தல்களை நாசூக்காக மேற்கொள்ள மலையக தலை மைகள் மனம் கொள்வது நல்லது.

பிந்திய  தகவல்களின்படி 2020இல் நாட்டிலுள்ள அனைத்து கல்வியல் கல்லூரிகளும் கல்விமாணி பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்தப்பட உள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த வகையில் மலையகத்தில் உள்ள ஒரே கல்வியியல் கல்லூரியான பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியும் அந்த வாய்ப்பைப் பெறும். ஆனால் மலையகத்துக்கென அமைக்கப்பட்ட பத்தனை ஸ்ரீபாத கல்லூரி சில சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது. முக்கியமாக சிங்கள மொழி மூலமான அதிபர்.

மலையகத்துக்கென ஒரு பல்கலைக்கழகம் இல்லை. பல்கலைக்கழக கல்லூரியோ தொழில்நுட்பக் கல்லூரியோ இல்லை. இப்போதைக்கு இருப்பது பத்தனை கல்வியியல் கல்லூரி மட்டுமே.

இதுவும் கையை விட்டுப் போகுமானால் அது மலையகக் கல்விக்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும். மலையக பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்வி இராஜாங்க அமைச்சார் விஜயகலா மகேஸ்வரனும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து அதிரடியாக எதையாவது செய்தாக வேண்டும்.

தியத்தலாவை
பாலசுப்பிரமணியம்...

Add new comment

Or log in with...