சப்ரகமுவ மாகாண அரச சேவைக்கு 138 பேர் நியமனம் | தினகரன்

சப்ரகமுவ மாகாண அரச சேவைக்கு 138 பேர் நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தில் புதிதாக 138 பேர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 

இவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு 06ஆம் திகதி சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள மாகாண சபையின் கீழ் உள்ள நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக முகாமைத்துவ உயர்தர உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் உள்ளடங்கலாக 138பேர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டன. 

இந் நியமனங்கள் சப்ரகமுவ மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் மூலம் எழுத்து மூலம் மற்றும் நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்பட்ட 138பேருக்கே நியமனம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க, சப்ரகமுவ மாகாண சபைத் தலைவர் கஞ்சன ஜயரத்ன, மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலணி, ஆளுநர் அலுவலகத்தின் செயலாளர் ஹேரத்.பி.குலரத்ன, மாகாண அரச சேவைகள் அணைக்குழுவின் செயலாளர் சுநேத்ரா குணவர்தன உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

(காவத்தை தினகரன் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...