இன நல்லுறவு எழுத்தாளர்களால்தான் உருவாக்கப்பட வேண்டும் | தினகரன்

இன நல்லுறவு எழுத்தாளர்களால்தான் உருவாக்கப்பட வேண்டும்

ஒரு எழுத்தாளனுக்கு நாம் செய்கின்ற பெரும் கைங்கரியம் அவனுடைய எழுத்துக்களை மீள்வாசிப்புச் செய்வதாகும் என பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.மருதூர்க்கனியின் நூலை வாசிக்கின்ற போது அவர் எம்முள் உள்நுழைந்து அவரின் நூலைப் போன்று இன்னும் ஒரு நூலை உருவாக்கக்கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்திவிட்டார்.அதுதான் ஒரு கவிஞனது முக்கியமான வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.

மூத்த எழுத்தாளர் மர்ஹ_ம் யூ.எம்.ஹனீபா மருதூர்க்கனி எழுதி வெளியிட்ட ஐந்து நூல்களின் அறிமுக விழா அண்மையில் மருதமுனையில் எழுத்தாளர் மருதூர் கொத்தன் நினைவரங்கில் நடைபெற்றது.  இங்கு அவரது நூல் அறிமுகவுரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 கவிஞர் மருதமுனை ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை மருதூர்க்கனி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.இங்கு மண் பூனைகளும் எலி பிடிக்கும்,அந்த மழை நாட்களுக்காக,மருதூர்க்கனியின் கவிதைகள்,என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்,சந்தணம் பெட்டகமும் கிலாபத் கப்லும் ஆகிய ஐந்து நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

பேராசிரியர் றமீஸ் அப்துல்லா இங்கு மேலும் உரையாற்றுகையில்:மருதூர்க்கனி மருதமுனையின் முக்கியமான அடையாளம். அவர் ஆரம்பத்திலேயே ஒரு இடது சாரியாகவும் எழுத்தாளராகவும் கவிஞனாகவும்; நம்மத்தியில் வலம் வந்தவர். பிற்காலத்திலே ஒரு நல்ல எழுத்தாளனை நாம்; பார்க்கின்றபொழுது அவனுடைய நூலின் எல்லாப் பகுதிகளும் முக்கியமாக இருக்கும்;. அந்தப் பண்பு மருதூர்க்கனியினுடைய நூல்களில் இருக்கிறது.எங்களிடம் சில பலவீனம் இருக்கிறது நாங்கள் சிலதை வாசிப்பதில்லை ஆனால் மருதூர்கனியை வாசிக்கிறபோது நிறைய விடயங்களை அறியமுடியும்.

 மருதூர்க்கனியின் அந்த மழை நாட்களுக்காக  நூலை வாசிப்பதன் மூலம் வெளிவருகிற முக்கியமான விடயம் அவர் கவிதை எழுதியிருக்கிறார் என்பதை விட பல ஆவணங்களின் பெட்டகமாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

பல செய்திகளை இந்த நூ}ல்களுக்குள்ளே அவர் கொண்டு வந்திருக்கின்றார்.தாயை அவர் வர்ணித்து தாய்க்காக கவிதை எழுதினார் என்பதை விட தாயின் பல்வேறு உரையாடல்கள் ஊடாக இந்த சமூகத்தினுடைய விமர்சனத்தை; செய்ய அவர் முற்பட்டிருக்கின்றார். இன நல்லுறவு என்பது எழுத்தாளர்களால்தான் உருவாக்கப்பட வேண்டும்;.அந்தக் காலத்திலே அதுதான் நடந்திருக்கின்றது.ஈழத்து தமிழ் கவிதைப் பரப்பிலே அதிகமான உவமைகளை அல்லது படிமங்களை உருவாக்குவதில் முஸ்லிம் கவிஞர்கள் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயமாகும். இதை ஒரு ஆய்வாக செய்து பார்க்கலாம். மருதூர்க்கனியின்; கவிதையைப் பார்த்து நீலாவணன் விழித்துப் போகின்றார்.

“பால் போல் நிலா வெளியில் நெய்ப்பானை கவிழ்ந்தது போல் ஒளிவெள்ளம’; என்ற வரிகளைப் படித்துவிட்டு இந்த வரிகளை நீதானா எழுதினாய் என்று ஆச்சரியப்பட்டு நீ கவிஞன்தான் என்று அங்கீகாரம் வழங்கி மருதூர்க்கனியின் தோளிலே தட்டி அவரை கவிஉலகுக்குக் கொண்டு வந்திருக்கின்றார் நீலாவணன்.

இதுதான் இன உறவின் முக்கிய அடையாளமாகும்.இவ்வாறாக தமிழ்,முஸ்லிம் இன நல்லுறவையும் ஒற்றுமையையும் இலக்கியத்தின் ஊடாக கட்டியெழுப்ப தமிழ்,முஸ்லிம் எழுத்தாளர்கள் முன்வரவேண்டும். பன்முக ஆளுமையின் திரட்சிதான் மருதூர்க்கனி அவர் இன ஒற்றுமையின் பிரதிபலிப்பை சமூகத்தில் கொண்டு வரப் பாடுபட்டவர்.இன்றைய சூழலுக்கு மருதூர்க்கனி போன்ற சிந்தனையாளர் நமக்குத் தேவைப்படுகின்றனர் எனவும்அவர்  தெரிவித்தார். 

இங்கு பேராசிரியர் சி.மௌனகுரு சிறப்புரையாற்றினார்;;.பேராசிரியர் செ.யோகராசா,ஆய்வாளர் சிறாஜ் மசூர்,கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ், விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அகமட் ஆகியோரும் நூல்கள் பற்றி உரையாற்றினார்கள். 

பி.எம்.எம்.ஏ. காதர் ...

படங்கள் மருதமுனை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...