Thursday, March 28, 2024
Home » இரசாயன கப்பலின் மீது ஈரானிலிருந்து தாக்குதல்

இரசாயன கப்பலின் மீது ஈரானிலிருந்து தாக்குதல்

- அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் பென்டகன் தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
December 25, 2023 3:16 pm 0 comment

இந்திய பெருங்கடலில் ஈரானில் இருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று இராசாயன கப்பல் ஒன்றை தாக்கியதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இந்து சமுத்திரத்தில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் செம் புளுட்டோ கப்பல் நேற்று முன்தினம் (23) தாக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளது. எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கெம் புளுட்டோ என்ற இந்த கப்பல் மீது ஈரானில் இருந்து வந்த ஒருவழி ஆளில்லா விமானமே தாக்கியதாக பெண்டகன் கூறியது. ஜப்பானுக்கு சொந்தமான லைபீரிய கொடியுடனான இந்தக் கப்பல் நெதர்லாந்தால் இயக்கப்படுகிறது என்றும் அது கூறியது.

இது தொடர்பில் ஈரான் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. யெமனின் ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஆளில்லா விமானம் மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை நடத்திவரும் நிலையிலேயே இந்த சம்பவம் நிழ்ந்துள்ளது.

பலஸ்தினத்திற்கு அதரவாக ஹூத்திக்கள் நடத்தும் இந்தத் தாக்குதல்கள் ஈரான் ஆதரவுடனேயே இடம்பெறுவதாக அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பல முன்னணி கப்பல் நிறுவனங்களும் செங்கடல் வழியான தனது பயணப் பாதையை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT