சூரிய ஒளியினால் தேகத்துக்கு விற்றமின் டி | தினகரன்

சூரிய ஒளியினால் தேகத்துக்கு விற்றமின் டி

எமது தேக ஆரோக்கியத்துக்கு சூரிய ஒளியும் சிறந்ததாகும். காலை வேளையில் சூரிய ஒளியில் சில நிமிடங்களை நாம் செலவிடுவதன் மூலம் இயற்கையாக விற்றமின் டி சத்தை பெற்றக்கொள்ள முடியும்.

தாமதமாக உறங்கச்  செல்வது, காலை வேளையில் சூரிய ஒளி உடம்பில் படாமலிருப்பது, குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரத்தைச்; செலவிடுவது, சுற்றுச்சுசூழல் மாசு, தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்டவை விற்றமின் டி பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

உடல் உறுப்புகளின் அத்தியாவசியமான செயற்பாட்டுக்கு விற்றமின் டி அவசியமானதென்பதுடன், விற்றமின்  டி உடம்பிலுள்ள உயிரணுக்கள் மற்றும் சுரப்பிகளின்  செயற்;பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.

இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டவும், சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் விற்றமின் டி அத்தியாவசியமானது.

மேலும் முதுகுவலி, தசைவலி, சோர்வு, மன அழுத்தம், முடி கொட்டுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் விற்றமின் டி பற்றாக்குறையால் ஏற்படுபவையென வைத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இயற்கையாகக் கிடைக்கும் சூரியஒளியில் சில நிமிடங்களை நாம் செலவிட்டு எமது தேக ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்.


Add new comment

Or log in with...