நீர்கொழும்பு, கட்டுநாயக்க பகுதிகளில் 16 மணித். நீர்வெட்டு | தினகரன்

நீர்கொழும்பு, கட்டுநாயக்க பகுதிகளில் 16 மணித். நீர்வெட்டு

 
அத்தியாவசிய பாரமரிப்பு நடவடிக்கை காரணமாக நீர்கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
 
இன்று காலை 11.00 மணியில் இருந்து 16 மணித்தியாலங்கள் வரை இந்நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் என சபை அறிவித்துள்ளது.
 
அதன் அடிப்படையில், நீர்கொழும்பு நகர சபை பகுதிகள் மற்றும் துவபிட்டிபன, கட்டுநாயக்க விமான நிலைய இராணுவ முகாம், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என சபை அறிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...