Home » நாட்டின் முன்னுள்ள சவால்களை அறிந்து பொறுப்புகளை நிறைவேற்ற ஒன்றுபடுவோம்

நாட்டின் முன்னுள்ள சவால்களை அறிந்து பொறுப்புகளை நிறைவேற்ற ஒன்றுபடுவோம்

- புதிய எதிர்பார்ப்புகளை தோற்றுவிக்கும் திருநாளாக அனைவருக்கும் அமையட்டும்

by Rizwan Segu Mohideen
December 25, 2023 11:24 am 0 comment

கிறிஸ்மஸ் என்பது எதிர்பார்ப்புக்களின் திருநாளாகும். “கண்ணீருடன் இருளில் சென்ற மக்களுக்கு ஔி கிட்டியது” அந்த எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை அமைய பிரார்த்திப்போம்.

“வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள்” என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம், ஒருபோதும் யதார்த்தத்தை மறக்க கூடாது.

மானிடர்களைப் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். தம்மை எதிர்ப்பவர்களையும், தமக்கு இடையூறு செய்வோரையும் மன்னித்து அவர்கள் மீதான கோபத்தையும், வெறுப்பையும் போக்கிக்கொள்ளுமாறு கிறிஸ்தவ மதம் நமக்கு கற்பிக்கிறது.

கிறிஸ்மஸ் கொண்டாத்தினால் சிறந்த மாற்றங்கள் கிடைக்கும். அவ்வாறான மாற்றங்கள் உளப்பூர்வமானதும் உண்மையானாதுமாக இல்லாத போது கிறிஸ்மஸ் கொண்டாட்டம் அர்த்தமற்றதாகிவிடும்.

பல்வேறு சவால்கள் நம்முன் நிற்கின்ற தருணத்தில், நாம் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். நாட்டின் நமக்கிருக்கும் சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அழைப்பு விடுக்கும் அதேநேரம், உலக மக்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை அமையட்டும் என வாழ்த்துகிறேன்.

ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

நத்தார்! நம்பிக்கையின் பெருவிழா!

Christmas-Day-Message-Sinhala

அற்புதமான படிப்பினைகள் மூலம் அர்த்தமுள்ளதாக வாழ்வோம்

நத்தார் செய்தி பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அமைதியை உண்டாக்கட்டும்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT