யாழில் கற்றாழைகளை களவாடிச் சென்ற இருவர் கைது | தினகரன்

யாழில் கற்றாழைகளை களவாடிச் சென்ற இருவர் கைது

யாழ்ப்பாணம் புங்குடு தீவகப் பகுதியில் கற்றாழைகளை களவாக பிடுங்கி சென்ற தென் பகுதியை சேர்ந்த இரு வியாபாரிகள் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மண்டைதீவு சந்தியில் இன்று (03) மதியம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள கற்றாழை தோட்டங்களுக்குள் புகுந்த தென்னிலங்கை வியாபாரிகள் அங்கிருந்த பயிர்களை களவாக பிடுங்கி வாகனத்தில் ஏற்றி வந்துள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த வாகனத்தை மறிக்க முற்படட போது தப்பித்துள்ளனர். இதனால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மண்டைதீவு சந்தியில் வைத்து இருவரும் மடக்கி பிடிக்கப்பட்டனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் விவேகாந்த் தலைமையிலான பொலிஸாரே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபடடனர்.

கைது செய்யப்படட சந்தேக நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தினையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...