லைக்கா தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் 'பன்னிக்குட்டி' | தினகரன்


லைக்கா தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் 'பன்னிக்குட்டி'

லைக்கா புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் தயாரிக்கும் 'பன்னிக்குட்டி' எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார். இதன்மூலம் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு, சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர், 'பழைய ஜோக்' தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆண்டவன் கட்டளை, 49-0, கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் 'K' என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் என்.ஆர் சுகுமாரன், படத்தொகுப்பினை எம்.அனுசரண் மேற்கொள்கிறார். 


Add new comment

Or log in with...