ரயில் பாதையில் சென்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த போது அசம்பாவிதம் | தினகரன்

ரயில் பாதையில் சென்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த போது அசம்பாவிதம்

ரயில் பாதையில் சென்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த போது அசம்பாவிதம்-2 Students Dead-While Attempt to Rescue-Nawalapitiya

மாணவியும், காப்பாற்றச் சென்றவரும் பலி

ரயிலில் மோதச் சென்ற மாணவியை காப்பாற்ற சென்ற மாணவர் ரயிலில் மோதி உயிரிழந்ததோடு, குறித்த மாணவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டி, ஜயசுந்தர பிரதேசத்தில் இன்று (02) இடம்பெற்ற இச்சம்பவத்தில், ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த இருவரே இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.

ரயில் பாதையில் சென்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த போது அசம்பாவிதம்-2 Students Dead-While Attempt to Rescue-Nawalapitiya

கொழும்பு - கோட்டையிலிருந்து எல்ல நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இந்த மாணவி மற்றும் மாணவன் மோதுண்டுள்ளனர்.

நாவலப்பிட்டி, தெகிந்த பகுதியை சேர்ந்த ஹர்ஷ குமார எனும் 16 வயதுடைய மாணவனும், நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பகுதியை சேர்ந்த பாக்யா செவ்வந்தி எனும் 15 வயதுடைய மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

ரயில் பாதையில் சென்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த போது அசம்பாவிதம்-2 Students Dead-While Attempt to Rescue-Nawalapitiya

உயிரிழந்த மாணவன் மற்றுமொரு மாணவியுடன் ரயில் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது மற்றுமொரு மாணவியும் அப்பாதை வழியே தொலைபேசியில் பேசியவாறு சென்றுள்ளார். இதன் போது பின்னால் வந்தத ரயிலை அவதானித்த மாணவன் தன்னுடன் இருந்த மாணவியை தள்ளி விட்டு, காப்பாற்றி, மற்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த போது இருவரும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்) 


Add new comment

Or log in with...