இந்திய விமானி அபிநந்தன் வாகாவில் இந்தியாவிடம் ஒப்படைப்பு | தினகரன்

இந்திய விமானி அபிநந்தன் வாகாவில் இந்தியாவிடம் ஒப்படைப்பு

இந்திய விமானி அபிநந்தன் வாகாவில் இந்தியாவிடம் ஒப்படைப்பு-Indian Wing Commander Abhinandan Varthaman, Captured By Pakistan Returns

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமன் வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டார்.

இந்திய விமானி அபிநந்தன் வாகாவில் இந்தியாவிடம் ஒப்படைப்பு-Indian Wing Commander Abhinandan Varthaman, Captured By Pakistan Returns

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமனை இன்று விடுவிப்பதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அமைதியை வலியுறுத்தும் நோக்கில் இந்த விடுவிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்தது. இதைத்தொடர்ந்து, வாகா எல்லையில் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தகவல் தெரிவித்தார்.

இந்திய விமானி அபிநந்தன் வாகாவில் இந்தியாவிடம் ஒப்படைப்பு-Indian Wing Commander Abhinandan Varthaman, Captured By Pakistan Returns

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகள் முகாமை அழித்தது.

இந்திய விமானி அபிநந்தன் வாகாவில் இந்தியாவிடம் ஒப்படைப்பு-Indian Wing Commander Abhinandan Varthaman, Captured By Pakistan Returns

இதையடுத்து, எல்லை கட்டுப்பாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ நிலையங்களை நோக்கி தாக்குதல் நடத்த முயன்ற 24 பாகிஸ்தான் போர் விமானங்களை, இந்தியாவை சேர்ந்த 7 போர் விமானங்கள் தடுத்து நிறுத்தி, பதில் தாக்குதல் மேற்கொண்டது. இதில் மிக்-21 ரக போர் விமனாத்தை இயக்கிய போர் விமானி அபிநந்தன் அத்துமீறி புகுந்த பாகிஸ்தான் f-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து நடந்த பதில் தாக்குதலில் அபினந்தன் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தப்பித்து குதித்த அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் தரையிரங்கியதால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறைவைக்கப்பட்டார்

இதையடுத்து, எந்த நிபந்தனையுமின்றி பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியவந்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் நேற்று அறிவித்தார்.

பின்னர், அபிநந்தன் வர்த்தமனை, தாயகம் அழைத்து வர இந்திய அரசு தரப்பு, பாகிஸ்தானுக்கு ஒரு சிறப்பு விமானப்படை விமானத்தை அனுப்பலாம் என்று திட்டமிட்டிருந்தது, அதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து அபிநந்தன், வாகா எல்லையில் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.(என்.டி.ரி.வி)

Add new comment

Or log in with...