'அரசியல் கத்துக்குட்டிகள் எனக்கு அரசியல் படிப்பிக்க வேண்டாம்' | தினகரன்

'அரசியல் கத்துக்குட்டிகள் எனக்கு அரசியல் படிப்பிக்க வேண்டாம்'

அரசியல் கத்துக்குட்டிகள் எனக்கு அரசியல் படிப்பிக்க வேண்டாமென வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.  

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டில்  நேற்று (28) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.  

கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற யாழ். மாநகர சபை அமர்வில் சீ.வி.கே.சிவஞானம் ஆணையாளராக இருந்தபோது, ஊழல் இடம்பெற்றதாகவும்  அத்துமீறிய நியமனங்கள் வழங்கியதாகவும் முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி  பற்குணராஜா குற்றஞ்சாட்டியிருந்தார்.  

அவரின் குற்றச்சாட்டு தொடர்பாக தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். என்னைப் பற்றித் தீர்மானிக்க வேண்டியவர்கள் இந்த ஊழல்வாதிகள்  அல்ல. தீர்மானிக்க வேண்டியவர்கள் எனது மக்கள். நான் எந்தக்காலத்தில் என்ன செய்தேன் என்று தீர்ப்பளிக்க வேண்டியது மக்கள் தான். அந்த மக்கள்  தீர்ப்பையே நான் வரவேற்கின்றேன். மக்களைப் பொய்யர்களாக மாற்றிப் பொய்யான  தகவல்களைக் கொடுத்து ஏமாற்ற வேண்டாம்.  

அரசியல் கத்துக்குட்டியும் அல்ல நான். அரசியல்  கத்துக்குட்டிகள் எனக்குப் படிப்பிற்கக் கூடாது. ஆனால், உண்மையை மக்கள்  புரிந்துகொள்ள வேண்டும். மாநகர முதல்வர் என்று சொல்லிக்கொள்ளும் பெண்மணிக்கு இந்த விடயங்கள் தெரியாது என்றார்.    


Add new comment

Or log in with...