பாகிஸ்தான் மீதான இந்திய விமானத் தாக்குதல்; இரு நாடுகளும் எதிரும் புதிருமான அறிக்ைக | தினகரன்

பாகிஸ்தான் மீதான இந்திய விமானத் தாக்குதல்; இரு நாடுகளும் எதிரும் புதிருமான அறிக்ைக

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது எல்லை கடந்து இந்திய இராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும்

தாக்குதல் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''இந்தியாவின் போர் விமானங்களான 12 மிராஜ் ஜெட் விமானங்கள் எல்லை கடந்து சென்று பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை 3 மணியளவில் தாக்குதல் நடத்தின. இந்த விமானங்கள் சுமார் 1000 கிலோ வெடிகுண்டை தீவிரவாதிகள் முகாம் மீது வீசி முற்றிலுமாக அழித்தன. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.''

இந்தத் தாக்குதல் குறித்து இந்தியப் பாதுகாப்புத் துறை, ''பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானங்கள் எல்லை மீறித் தாக்குதல் நடத்தியது குறித்த தகவல் ஏதும் எங்களிடம் இல்லை'' என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவ தளபதியோ கிண்டலாக ட்வீட் பதிவு செய்துள்ளார்.

இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிப் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விமானப்படை எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. ஆனால் பாகிஸ்தான் விமானப் படை உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய விமானங்கள் திரும்பிச் சென்றன. முஸாபராபாத் செக்டாரில் இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்தபோது உரிய நேரத்தில் பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்க அவசர அவசரமாக வெற்று இடத்தில் வெடிபொருளை போட்டுவிட்டு இந்திய விமானங்கள் தப்பியோடின. பாலாகோட் பகுதியில் வெடிபொருள் விழுந்துள்ளது. இதில் எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை. பொருட்சேதமும் இல்லை. இதேவேளை இந்திய இராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்திய விமானப் படையின் பைலட்களுக்கு எனது வணக்கங்கள்'' என்று பதிவிட்டுள்ளார். இதுபோன்று இத்தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமி

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த கேஜ்ரிவால்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி நமது நாட்டை பெருமைப்படுத்திய இந்திய விமானப் படையின் பைலட்களின் தைரியத்துக்கு எனது சல்யூட்.

மத்தியப் பிரதேச முதல்வர்

தேவேந்திர பட்னாவீஸ்

இந்திய விமானப் படையை நினைத்து பெருமை கொள்கிறேன். நமது தியாகிகளின் தியாகம் வீண் போகவில்லை.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி

இது இந்திய விமான படை அல்ல... இந்தியாவின் அற்புத வீரர்கள்... ஜெய்ஹிந்த்

சமாஜ்வாதிக் கட்சியின்

தலைவர் அகிலேஷ் யாதவ்

இந்திய விமானப் படைக்கு எனது சல்யூட். வாழ்த்துகள்

தமிழக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின்

நமது இந்திய விமானப் படையின் எதிர்பாராத செயலை கண்டு பெருமைக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

நமது 12 போர் விமானங்கள் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களைத் தாக்கி நாடு திரும்பியுள்ளன. இந்தியா தனது கதாநாயகர்களை நினைத்து பெருமை கொள்கிறது.

இயக்குநர் ராஜமௌலி: இந்திய விமானப்படைக்கு சல்யூட். ஜெய்ஹிந்த்

மகேஷ் பாபு: நம் இந்திய விமானப்படையை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன். வீரர்களுக்கு சல்யூட்.

ரம்யா: என் நாடு. என் பெருமை. நமக்காக உயிர் துறந்த தியாகிகளுக்கும் துயரத்தில் இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம்.

வரலட்சுமி சரத்குமார்: வீரர்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

முடிந்தவரை மனிதர்களாக நடந்துகொண்டதற்கும் அப்பாவிகளைத் தாக்காமல் இருந்ததற்கும் நன்றி.

ரகுல் ப்ரீத் சிங்: இந்திய விமானப்படைக்கு சல்யூட். ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது.

அக்‌ஷய் குமார்: தீவிரவாதிகளின் இருப்பிடங்களை தாக்கிய இந்திய விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்துகள். இனியும் அமைதியாக இருக்க முடியாது.

சித்தார்த்: ஒரு நாட்டுடன் போர் புரியும் அளவுக்கு பாகிஸ்தானிடம் அரசியல் ஒற்றுமையும் இல்லை. இராணுவ ஒழுங்கும் இல்லை, பொருளாதார பலமும் இல்லை. கொலைகாரர்களையும் பயங்கரவாதிகளையும் பாதுகாப்பதையும் நிறுத்துங்கள். வரலாறு தானாக மாறும். ஜெய்ஹிந்த்.

ஜுனியர் என் டி ஆர்: சரியான பதிலடியை நம் நாடு கொடுத்திருக்கிறது. இந்திய விமானப்படைக்கு சல்யூட். ஜெய்ஹிந்த்.


Add new comment

Or log in with...