மாத்தளை மாவட்ட நெல்லை கொள்வனவு செய்ய நிதி | தினகரன்


மாத்தளை மாவட்ட நெல்லை கொள்வனவு செய்ய நிதி

மாத்தளை மாவட்ட விவசாயிகளின் அறுவடை நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு 6100 மில்லியன் ரூபா நிதி அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை விவசாய வலய நெல் சந்தைப்படுத்தும் சபையின் பிரதி முகாமையாளர் ஆர்.எம். ரத்நாயக்க தெரிவித்தார். 

மாத்தளை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளமை தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள, கலேவெல, பல்லேபொல, நாவுல, சிகிரியா, லக்கல, தேவஹுவ, யடவத்த ஆகிய பிரதேசங்களில் அறுவடை செய்யப்படும் 5,000 மெற்றிக்தொன் நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒரு கிலோ  சம்பா நெல் 41 ரூபாவாகவும், நாடு நெல் 38 ரூபாவாகவும் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது. தலா ஒவ்வொரு விவசாயிடமிருந்தும்  2,000 கிலோ  நெல்லை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரவாத விலைக்கு நெல்லை அரசு கொள்வனவு செய்வதால்,நெல்லை விற்பனை செய்வதில் இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(மாத்தளை சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...