நோவா காலத்து பெருவெள்ளமும் இக்காலத்து போர்களின் பாதிப்பும் | தினகரன்

நோவா காலத்து பெருவெள்ளமும் இக்காலத்து போர்களின் பாதிப்பும்

திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரை

இக்காலத்திய பெருவெள்ளமாகப் போர்கள் ஏழைகள் மீது பெருஞ்சுமையை சுமத்துகின்றன. எனவே துன்புறும் நம் சகோதர சகோதரிகளுக்கு உடன்பிறந்தவர்களாக வாழ்கின்ற இதயத்தைக் கொண்டிருப்போம் என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கடவுள் கருத்துக்களோடு அல்ல மாறாக  இதயத்தோடு நம்மை அன்புகூர்கின்றார் என்றும் இன்றைய உலகில் இனிப்பு மிட்டாய்கள் போன்று வீசியெறியப்படும் குண்டுவெடிப்புகள் பேரிடர்கள் மற்றும் சித்திரவதைகளைக் கண்டு கண்ணீர் சிந்தும் அருளை கடவுளிடம் நாம் கேட்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி மறையுரையில் தெரிவித்துள்ளார்.

வத்திக்கானில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடக்க நூலில் நோவா காலத்து பெருவெள்ளம் பற்றிக் கூறும் முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

நோவா காலத்து பெருவெள்ளத்தை  இக்காலத்து போர்களோடு ஒப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை விழாக்களின் செலவுகளைச் செலுத்துகின்றவர்களாக இருக்கின்ற பசித்திருப்போர், அநாதைச் சிறார்கள், நலிந்தவர்கள், மற்றும் ஏழைகளின் துன்பங்கள் பற்றி நினைவுகூர்ந்து துன்புறும் இந்த நம் சகோதர சகோதரிகளுக்கு உடன்பிறந்த உறவாகவும்  நம் பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் வாழ்கின்ற மனித மற்றும் இறையுணர்வு கொண்ட ஓர் இதயத்தை நாம் கொண்டிருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மனிதரின் தீமைகளை நினைத்து வேதனையடைந்து அவர்களை ஏன் படைத்தோம் என கடவுள் வருந்துகின்றார் என்றும் கடவுளின் இந்த வேதனை உணர்வுகள் கருத்தளவில் அன்றி  மாறாக அவர் உண்மையிலேயே உணர்வளவில் துன்புகிறார் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.  நலிந்தவர்கள், சிறியோர், பசித்திருக்கும் சிறாரின் எண்ணிக்கை, அமைதியான சூழலில் வளரமுடியாத சிறார்கள், போர்களில் கொலை செய்யப்பட்ட பெற்றோரை இழந்த சிறார்கள், சிறார் படை வீரர்கள் போன்றோரை நினைத்துப் பார்ப்போம். இயேசுவைப் போன்று மனித இதயம் கொண்டிருக்க நாம் கடவுளிடம் வரம் கேட்போம். பெருவெள்ளத்தின் மாபெரும் துன்பங்கள் ,இக்காலப் போர்கள் என்ற பெருந்துன்பங்களின் செலவினங்கள், வாழ்வில் முன்னேற வழியில்லாத ஏழைகள், நலிவுற்றோர் மற்றும் சிறியோர் மீது சுமத்தப்படுகின்றன என்றுரைத்த திருத்தந்தை இவற்றை நினைத்து கடவுள் மனம் வருந்துவதை நினைத்துப் பார்ப்போம்.

இத்தகைய பெருந்துன்பங்கள் கடவுளின் படைப்பை அழிக்க விரும்பும் சாத்தானின் வேலைகள் என்றுரைத்த திருத்தந்தை உலகின் தீமைகளை நினைத்து மனம் வேதனைப்படும் ஆண்டவருக்கு நாம் ஆறுதலாக இருப்போம். செபத்தில் ஒன்றித்திருப்போம் என்றும் தெரிவித்தார்.  (ஸ)

 


Add new comment

Or log in with...