அருண் பாண்டியன் மகளின் முதல்படம்; குழந்தைகளும் பார்த்து ரசிக்க முடியும் | தினகரன்


அருண் பாண்டியன் மகளின் முதல்படம்; குழந்தைகளும் பார்த்து ரசிக்க முடியும்

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன், தற்போது கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். அவரின் சினிமா வருகை பற்றி இப்படிக் கூறுகிறார்;

``சென்னை எம்.ஓ.பி காலேஜ்ல எலெக்ட்ரானிக் மீடியா படிச்சேன். மாடலிங் துறைக்குப் போகலாம்னு ஆசை. அதுக்காக சில போட்டோ ஷூட்ஸ் பண்ணேன். ஆனா, அது வொர்க் அவுட் ஆகல. அப்புறம் அப்பாவோட பிசினஸைப் பார்த்துக்க ஆரம்பிச்சுட்டேன். சிங்கப்பூர்ல சினிமா சம்பந்தமான ஒரு கம்பெனியை நடத்திக்கிட்டு இருந்தேன். சினிமா படங்களை விநியோகம் பண்ற வேலைகளைப் பார்த்துட்டு இருந்தேன். இந்தத் தொழில் மூலமா ஃபிலிம் மார்க்கெட்டிங்ல கொஞ்சம் அனுபவம் ஏற்பட்டுச்சு. அப்புறம் பாலே & சால்சா நடனம் கத்துக்கிட்டேன். இப்போ சினிமாதான் முழு மூச்சு!"

``ஆடிஷன்ஸ்ல கலந்துக்கும்போது, பலபேர் என்னை ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க. பல கதைகளை நான் ரிஜெக்ட் பண்ணியிருக்கேன். எங்கேயும் என் அப்பாவோட பெயரைச் சொல்லி வாய்ப்பு வாங்க நினைக்கலை. பல இடங்கள்ல, 'நான் இவரோட பொண்ணுதான்'னு சொல்லாமலேயே ஆடிஷன்ஸ் அட்டென்ட் பண்ணியிருக்கேன். திறமையை வெச்சுத்தான் முன்னேறணும்னு இருக்கேன். அப்பா ஒருபோதும் என் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டதில்லை. சினிமாவுல நடிக்கிறதுக்கு நோ சொன்னதில்லை. இந்த வாய்ப்பு நானே அமைச்சுக்கிட்டதுதான்."

``படத்துக்கு டைட்டில் இன்னும் முடிவாகல. இயக்குநர் ஹரிஷ் இந்தக் கதையைச் சொல்லும்போதே, ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. கொஞ்சம்கூட டைம் எடுத்துக்காம, உடனே ஓகே சொன்னேன். காரணம், இந்த ஜானர் படங்கள் சமீபத்துல வரல. அதனால, இது கண்டிப்பா ஹிட் ஆகும்னு தோணுச்சு. தவிர, குழந்தைகளுக்குப் பிடிக்கிற விதத்துல இருக்கும்ங்கிறதுனால, ஓகே சொல்லிட்டேன். என் அக்கா பொண்ணு மனசுல வந்தா. இதுக்கு முன்னாடி நான் நடிச்ச சில நாடகங்கள் 16 வயதுக்கு மேற்பட்டவங்க பார்க்கிறதா மட்டும்தான் இருந்துச்சு. இனப் படுகொலை, போர் சம்பந்தமான நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். அதெல்லாம் அவளால பார்க்க முடியலையேனு வருத்தப்பட்டிருக்கா. இந்தப் படம் எங்க வீட்டுக் குழந்தைகளை மட்டுமில்ல, எல்லார் வீட்டுக் குழந்தைகளையும் என்டர்டெயின் பண்ணும்."

``ஹீரோ, ஹீரோயின், காமெடியன், வில்லன்னு வழக்கமான டெம்ப்ளேட்ல இருக்காது. சில கதாபாத்திரம், அந்தக் கதாபாத்திரங்களைச் சுத்தி நடக்கும் விஷயம்னு ரொம்ப சாதாரணமா இருக்கும். இதுதான் எனக்கு வேணும், ஹீரோ மெட்டீரியல் கதையெல்லாம் வேண்டாம்னு தோணுச்சு. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி பத்து நாள் ரிகர்சல் வெச்சார், இயக்குநர் ஹரிஷ். நடிப்பு பற்றி நிறைய விஷயங்களைக் கத்துக் கொடுத்தார். எனக்கு நான்தான் டப்பிங் பேசியிருக்கேன். ஹீரோ 'கனா' தர்ஷன். அவர்கூட நடிக்கும்போது ஒரு நண்பர் மாதிரி ஃபீல் பண்ணேன். மொத்தத்துல இந்த டீம் எனக்கு ரொம்ப கம்ஃபர்டபிளா இருந்தது."

``எனக்கு ரெண்டு அக்கா, ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. முதல் அக்கா அப்பாவோட சேர்ந்து பிசினஸைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. இன்னொரு அக்கா அமெரிக்காவுல டாக்டரேட் பண்றாங்க. அம்மா ஹவுஸ் வொய்ஃப். 'உன்னோட ட்ரீம் என்னவோ அதை நோக்கிப் போ'னு என்னை ஊக்கப்படுத்துறதே அம்மாதான்.' என்றார்.


Add new comment

Or log in with...