சொகுசு சந்தையில் அதிகூடிய ஹெரோயின் மீட்பு | தினகரன்

சொகுசு சந்தையில் அதிகூடிய ஹெரோயின் மீட்பு

294.49கிலோகிராம்; ரூ. 294.5கோடி பெறுமதி

கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு சந்தை ஒன்றில் சுமார் 294.49கிலோ கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (23) பிற்பகல் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவ்வாறு போதைப் பொருள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்டுள்ள ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி சுமார் ரூபா 294.5கோடி (ரூ. 2,945மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கட்டடத்தின், வாகன தரிப்பிடத்தில் வேன்கள் இரண்டில் 10பயண பொதிகளில் 272பொதிகளாக பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த போதை பொருள் விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளதாக, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த ஹெரோயின் போதைப் பொருள் இலங்கையில் பொலிசார் கைப்பற்றிய அதிகூடிய போதைப்பொருள் தொகையாகும்.


Add new comment

Or log in with...