கொட்டாஞ்சேனையில் 'குடு சூட்டி' மீது துப்பாக்கிச்சூடு | தினகரன்

கொட்டாஞ்சேனையில் 'குடு சூட்டி' மீது துப்பாக்கிச்சூடு

கஞ்சிப் பானை இம்ரானுடன் தொடர்பு

கொட்டாஞ்சேனையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொட்டாஞ்சேனை, மெல்வத்த போதிராஜா மாவத்தையில் நேற்றிரவு (14) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 'குடு சூட்டி' என அழைக்கப்படும் 39 வயதான ஆஷா பாரி எனும் பெண் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், குறித்த பெண்ணின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இப்பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவரென்பதுடன், தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள கோஷ்டித் தலைவர்களில் ஒருவரான 'கஞ்சிப் பானை' இம்ரானுடன் தொடர்பை பேணி வந்தாரென்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...