போரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு | தினகரன்

போரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு

2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் 'செமட்ட செவண' கம் உதாவ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சுண்ணபுரம் கிழக்கில் நிர்மாணிக்கப்பட்ட 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் நேற்று (22) வெள்ளிக்கிழமை வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் தனக்கென சொந்தமான வீட்டில் வாழ்வதற்கான உரிமையினைப் பெற்றுக்கொடுக்கும் உன்னத உதாகம எண்ணக்கருவினை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவம் மற்றும் ஆசீர்வாதத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெறிப்படுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ் வீடமைப்பு,நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இம்மாதிரிக் கிராமத்தில் 25  வீடுகள் அடங்குவதுடன் அவற்றிற்கான உறுதிப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டதுடன், இதற்கு இணையாக சுயதொழிலாளர்களுக்கு கடனுதவிகள் மற்றும் மூக்குக்கண்ணாடிகள் என்பன அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.   

(கல்லடி குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...