ரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் | தினகரன்

ரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்

ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பில், பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள், கொழும்பு - காலி வீதி மற்றும் ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ரத்கம, பூஸ்ஸ, ரத்னஉதாகம பிரதேசத்தைச் சேர்ந்த 31வயதான ரசின் சிந்தக மற்றும் 33 வயதான மஞ்சுள அசேல குமார ஆகிய வர்த்தகர்கள் இருவர் கடந்த ஜனவரி 23ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தனர். இதனையடுத்து, சி.ஐ.டி. அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது,  அவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...