அரசியலமைப்பு பேரவையின் அமைப்பை மீள பரிசீலிக்க வேண்டும் | தினகரன்

அரசியலமைப்பு பேரவையின் அமைப்பை மீள பரிசீலிக்க வேண்டும்

பாராளுமன்றத்தில் டக்ளஸ் எம். பி சுட்டிக்காட்டு  

அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும். எதிர்க்கட்சி என்பது அரசாங்கத்துடன் “ஒருமித்து” இருக்கும் கட்சியாக இருத்தல் ஆகாது என்ற யாதார்த்தத்தை இனியாவது நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். ஜனாதிபதியால் நியமனம் பெறும் அனைவரும் சுயாதீனமாக இயங்குவதற்கான செயற்பாடுகள் அவசியமென ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (21) நடைபெற்ற அரசியல் யாப்பு  தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2015ஆம் ஆண்டு மே மாதத்தில் அமுலுக்கு வந்த 19ஆவது திருத்தமே தற்போது நடைமுறையிலிருந்து வருகிறது. இத் திருத்தத்தின் பிரகாரம் “பாராளுமன்ற சபை” என்பது “அரசியலமைப்புப் பேரவை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

19ஆவது திருத்தத்தின்படி, 09ஆணைக் குழுக்களின் உறுப்பினர்களின் பெயர்களை விதந்துரைக்கும் கடமை அரசியலமைப்புப் பேரவைக்கே இருக்கும். அத்துடன், பிரதம நீதியரசர் உட்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் உட்பட நீதியரசர்கள், நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் என்பதுடன், சட்ட மாஅதிபர், கணக்காளர் நாயகம், பொலிஸ் மாஅதிபர், குறைகேள் அதிகாரி (ஒம்பூட்ஸ்மன்), பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய 5பதவிகளுக்கான பெயர்களை ஜனாதிபதி நியமனம் செய்வதற்கு முன்னதாக அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்குவது அவசியம். இந்த 19ஆவது திருத்தத்தில் புதிதாக இரண்டு விடயங்கள் உள்ளன.  

அரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14 நாட்களுள் ஜனாதிபதி நியமனம் செய்யாமல் இருப்பாராயின், அந்த நபர் நியமனம் பெற்றவராகவே கருதப்படுவார். அத்துடன் அரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையையோ அல்லது அங்கீகாரத்தையோ பெற்ற எந்த நபரையும் பதவி நீக்குவதாயின் அது பாராளுமன்றத்தில் 2/3 அங்கீகாரத்தைப் பெற்றே நீக்க முடியும். மேலும் மே மாதம் 2015 முதல் ஜனவரி 2019 வரை அரசியலமைப்புப் பேரவை என்ற பெயருடன் இருந்தபோதும் அதனுடைய செயற்பாடுகள் தொடர்பான


Add new comment

Or log in with...