பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கானில் மாநாடு | தினகரன்

பாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கானில் மாநாடு

மதகுருக்களின் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பது குறித்து திருச்சபை தலைவர்களின் நான்கு நாள் உயர்மட்ட மாநாட்டை பாப்பரசர் பிரான்ஸிஸ் நேற்று ஆரம்பித்து வைத்தார். மத குருக்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் விசாரிக்கப்பட்டுவரும் நிலையிலேயே இந்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனைகளுடன் ஆரம்பமான இந்த மாநாட்டில் விரிவுரைகள், சிறுவர்களை பாதுகாப்பது மற்றும் உண்மையை மறைப்பதை தடுப்பது தொடர்பான செயலமர்வுகளும் இடம்பெறவுள்ளன.

“எம்மிடத்தில் நீதியை கோரும் சிறுவர்களின் அழுகுரலை நாம் செவிமடுப்போம்” என்று இந்த மாநாட்டை ஆரம்பித்து உரையாற்றும்போது பாப்பரசர் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவ திருச்சபைகள் மீதான பாலியல் குற்றசாட்டுகள் சிலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் கடந்த ஆண்டு எழுந்த நிலையில் பாப்பரசர் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

114 உயர்மட்ட ஆயர்களை இலக்கு வைத்தே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இவர்கள் இந்த பிரச்சினை குறித்து தெளிவான புரிதலுடன் தமது சொந்த நாடுகளுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...