செர்பிய பிரதமரின் ஒருபாலுறவு துணைவி குழந்தை பிரசவம் | தினகரன்

செர்பிய பிரதமரின் ஒருபாலுறவு துணைவி குழந்தை பிரசவம்

ஒருபாலின உறவில் உள்ள செர்பியாவின் பிரதமர் ஆனா பெர்னபிச் இணைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சர்வதேச அளவில் ஒருபாலின உறவில் உள்ள ஒரு தலைவருக்கு குழந்தை பிறப்பது இதுவே முதல்முறை என்று செர்பிய பிரதமரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவரான செர்பிய பிரதமரின் ஒருபாலின துணைவி செயற்கை கரூவூட்டல் மூலம் குழந்தை பிரசவித்துள்ளார்.

பழமைவாத நாடான செர்பியாவில் ஆனா பெர்னபிச் பிரதமரானது அனைவரையும் முதலில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்னும் அந்த நாட்டில் ஒருபாலின திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை.

ஆனா பெர்னபிச் பிரதமரான பின்னும் எல்.ஜி.பி.டி சமூகங்களின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை எனும் விமர்சனமும் செர்பியாவில் இருந்து வருகிறது.


Add new comment

Or log in with...