மடக்கக்கூடிய முதல் திறன்பேசி அறிமுகம் | தினகரன்

மடக்கக்கூடிய முதல் திறன்பேசி அறிமுகம்

சம்சுங் நிறுவனம் மடக்கிவைக்கக்கூடிய ‘கெலக்ஸி போல்ட் 5ஜி’ திறன்பேசியை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே மடக்கிவைக்கக்கூடிய திறன்பேசி அறிமுகமாவது இதுவே முதல்முறையாகும்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் சம்சுங் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக 5ஜி கம்பில்லாக் கட்டமைப்பில் பயன்படுத்தக்கூடிய சம்சுங் நிறுவனத்தின் முதல் திறன்பேசியாக இது திகழ்கிறது. 4.6 அங்குல தொடுதிரையைத் திறன்பேசி கொண்டுள்ளது. அதனை விரித்தால் அது 7.3 அங்குலமாக மாறும்.

வரும் ஏப்ரல் 26ஆம் திகதியிலிருந்து அந்தப் புதிய திறன்பேசி விற்பனைக்கு வரும். அதன் விலை 1,980 டொலர்களாகும்.


Add new comment

Or log in with...